sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

 இது உங்கள் இடம்

/

 இது உங்கள் இடம்

 இது உங்கள் இடம்

 இது உங்கள் இடம்


PUBLISHED ON : பிப் 17, 2026 02:02 AM

Google News

PUBLISHED ON : பிப் 17, 2026 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர் வைத்தால் போதுமா?

சு.ராமலிங்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், நான்கு ஆண்டுகளாக காட்டாத வேகத்தை, ஆட்சி முடியப் போகும் இந்த நான்கு மாதங்களில் காட்டுகிறார். இந்த வேகம் தேர்தலுக்காக தான் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

காலை எழுந்தவுடன் பல் துலக்குகிறாரோ இல்லையோ, ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். அதை அதிகாரிகள் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

அத்திட்டத்தால் என்ன பயன், எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தெல்லாம் ஆராய்வதில்லை.

அப்படி அவரது சிந்தனையில் கண நேரத்தில் உதயமான ஒரு திட்டம் தான், 'நம்பிக்கை இருக்கை!'

ஏற்கனவே, 2016ல் காவல் நிலையங்களில், 'வரவேற்பாளர் மேஜை' அமைக்கப்பட்டது. அது எந்த அளவு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது காவல் நிலையம் சென்றவர்களுக்கு தெரியும். இதில், புதிதாக, 'நம்பிக்கை இருக்கை' என்ற திட்டத்தை துவக்கியுள்ளார், ஸ்டாலின்.

நம்பிக்கையோடு செல்பவர்களுக்கு நம்பிக்கையை இழக்க வைக்கும் அரசு அலுவலகங்களில் முதன்மையானது எது என்று கேட்டால், அது காவல் நிலையம் தான்!

அரசியல்வாதிகள், பணம் படைத்தோரை நன்றாக, மரியாதையுடன் தான் நடத்துகின்றனர், காவல் துறை அதிகாரிகள். அதேநேரம், ஏழைகள், முதியோர், எளிய மனிதர்களை எப்படி நடத்துவர் என்பது நாடறிந்த ரகசியம்!

பண மோசடி செய்தவர் குறித்து புகார் கொடுத்து, ஐந்து ஆண்டுகளாக நடையாக நடக்கிறேன். ஒரு போலீஸ்காரர் கூட உட்கார சொன்னதில்லை. அலட்சியமாகத் தான் நடத்துகின்றனர்.

இப்போது, 'நம்பிக்கை இருக்கை' திட்டம் மட்டும் காவல் நிலையத்திற்கு வருவோருக்கு ராஜ மரியாதையை கொடுத்து விடுமா என்ன?

தி.மு.க., ஆட்சியில் தான் உதவி கமிஷனர் முதல், டி.ஜி.பி., வரை, கூடுதல் முதன்மை செயலர் அமுதா முதல், முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரிடமும் பண மோசடி குறித்த புகார் மனு கொடுத்தேன்; ஒன்றும் பலனில்லையே!

'உங்களுடன் ஸ்டாலின்' என்று திட்டம் கொண்டு வந்தார், முதல்வர். அதிலும் புகார் மனு அளித்தேன்; எதுவும் நடக்கவில்லை.

எனவே, திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவே தவிர, செயல்படுத்தப்படுவதில்லை என்பது தான் என்னைப் போன்ற பலரின் அனுபவமாக உள்ளது. செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு விதவிதமாக பெயர் சூட்டுவதால் மக்களுக்கு என்ன பயன்?

வசூல் ராஜாக்களுக்கு கை விலங்கு எப்போது?

என்.கந்தவேல், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள, 109 பணியிடங்களை நிரப்ப, பணி ஒன்றுக்கு தலா 8 லட்சம் முதல், 12 லட்சம் ரூபாய் வரை வசூல் நடைபெற்று வருவதாக வரும் செய்தி, திடுக்கி ட வைக்கிறது.

பணியில் சேரு வதற்கே, தி.மு.க., ஆட்சியில், 8 லட்சம் முதல், 12 லட்சம் ரூபாய் வரை, 'அன்பளிப்பு' வழங்க வேண்டுமென்றால், 50,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்று யாரும் கனவு காண வேண்டாம். மாத சம்பளம், 13,00 0 முதல் 25,000 ரூபாய் வரை தான்.

இந்த, 25,000 ரூபாயே, பணி மூப்படையும் தருவாயில் கிடைக்க விருக்கும் சம்பளம் தான்.

ஆக, 13,000 ரூபாய் சம்பளம் தரும் வேலைக்கு, 8 லட்சம் முதல், 12 லட்சம் ரூபாய் வரை, 'அன்பளிப்பு' தர தயாராக இருக்கின்றனர் என்றால், அப்பணியின் வாயிலாக மாதந்தோறும் எத்தனை லட்சம், 'சுருட்டுவர்' என்ற சந்தேகம் எழுகிறதல்லவா !

அதிலும், 109 காலி பணியிடங்களுக்கு 10,500 பேர் விண்ணப்பித்து, தற்போது, அவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறதாம்!

தேர்தல் நெருங்கி வருவதால், சொந்தக்கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை, 'கவனிக்கும்' வகையில், பணியிடங்கள் பிரித்து வேறு கொடுக்கப் பட்டுள்ளதாம்!

இப்படி ஒதுக்கீடு பெற்ற நிர்வாகிகள் தான், தாங்கள் பெற்ற ஒவ்வொரு பணியிடத்திற்கும், குறைந்தது நான்கு பேரிடம் வசூலித்து கொண்டிருக்கின் றனராம்!

ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றம் கை விலங்கு போடுவதில் காலதாமதம் செய்யும் வரை, இதுபோன்ற வசூல் ராஜாக்களின் காட்டில் மழை தான்!

காங்.,கை அழிக்க ராகுல் ஒருவர் போதும்!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் கூட்டத் தொடரில், முன்னாள் ராணுவ தளபதி நரவனே, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் குறித்து ஓர் புத்தகத்தில் எழுதிய விமர்சனத்திற்கு பதில் அளிக்கும்படி, வெளியிடாத அப்புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீண் ரகளையில் ஈடுபட்டுள்ளார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்.

இது போதாதென்று காங்கிரஸ் பெண் எம்.பி.,க்களை ஏவி, பிரதமரின் இருக்கையை முற்றுகையிடச் செய்ததும், பெண் எம்.பி.,க்களை வைத்து பிரதமரை தாக்க சதி செய்ததும், ராகுலின் கீழ்த்தரமான அரசியலை, நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

ராகுலின் இந்த சதிச்செயலை முன்னதாகவே அறிந்து கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமரை சபைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

உடனே, 'பிரதமர் பயந்து கொண்டு வரவில்லை' என்றும், 'சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டார்' என்றும் ராகுலின் சகோதரி பிரியங்கா வாய்க்கு வந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஒருவேளை பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் தாக்கப்பட்டிருந்தால், அது நாட்டிற்கு மிகப் பெரிய அவமானமாகப் போயிருக்கும். இந்நேரம், காங்., கட்சியை மக்கள் காரி உமிழ்ந்திருப்பர்.

அக்கட்சிக்கு வரலாற்றில் பெரிய இழுக்கைத் தேடித் தந்திருப்பார், ராகுல். அவரது அரசியல் வாழ்வில் அழியா கறை படிந்திருக்கும். ஓம் பிர்லாவால் இது தடுக்கப்பட்டு, ராகுல் காப்பாற்றப் பட்டுள்ளார்.

நாடு முழுக்க ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு சீட்டின் வாயிலாக மக்கள் காங்கிரஸை துரத்தித் துரத்தி அடித்தும், ராகுல் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

மரணப் படுக்கையில் கிடக்கும் காங்கிரசை உயிர்ப்பிக்க எந்தவித முயற்சியும் செய்யாமல், பிரதமரை எந்த வழியில் அவமானப்படுத்தலாம், பார்லிமென்டில் எப்படியெல்லாம் ரகளை செய்யலாம் என்ற சிந்தனையிலேயே நேரத்தை செலவிடுகிறார்.

இவரது இத்தகைய செயல்களே போதும், காங்கிரசை குழி தோண்டிப் புதைக்க!






      Dinamalar
      Follow us