sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

முன்னேற்றம் தராதவை துாக்கி எறியப்படும்!

/

முன்னேற்றம் தராதவை துாக்கி எறியப்படும்!

முன்னேற்றம் தராதவை துாக்கி எறியப்படும்!

முன்னேற்றம் தராதவை துாக்கி எறியப்படும்!


PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், 17 ஆண்டுகளுக்கு முன், மாவோயிஸ்ட்கள் ஆதரவு புரட்சியின் வாயிலாக மன்னராட்சியை அகற்றி, மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சியைத் துவங்கினர்.

கடந்த 17 ஆண்டுகளில், 12 அரசுகள்ஆட்சி புரிந்துள்ளன; ஓர் அரசு கூட, தன் முழு பதவிக் காலத்தை நிறைவு செய்யவில்லை.

இந்திய விரோத, சீன ஆதரவு ஆட்சியே நடைபெற்று வரும் நிலையில், அங்கு, மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் எந்த விதத்திலும் மேம்படவில்லை. எங்கும், எதிலும் ஊழல்...

இதனால், அரசியல்வாதிகளையும், அவர்களது ஆட்சியையும் மக்கள் வெறுக்க துவங்கி விட்டனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதே உண்மை!

இதன் வெளிப்பாடுதான், எந்தவித அரசியல் கட்சிகளின் துாண்டுதலுமின்றி, மக்கள் தாமாகவே முன்வந்து, நேபாளத்தில் மன்னர் ஆட்சியே வேண்டும் என்று சமீபத்தில் நடத்திய போராட்டம்!

இதன் வாயிலாக, நேபாளம் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு மக்கள் உணர்த்தும் செய்தி...

முன்னேற்றத்தைக் கொண்டு வராத கட்சிகள் எதுவாயினும், அவற்றை தூக்கியெறிய மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதே!

இதை, இங்குள்ள கட்சிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும். இலவசங்கள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்!



அலுத்து போச்சு!


கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்தியை ஏற்காவிட்டால் பணம் தரமாட்டோம் என மத்திய அரசு மிரட்டுகிறது; இனமானத்தை அடகு வைத்து வெகுமானம் பெறமாட்டோம்' என்று சட்டசபையில் பேசியுள்ளார், தமிழக முதல்வர்.

சட்டப்படி நிதி பகிர்வு இல்லையென்றால், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகலாமே... அதை விடுத்து, இப்படிப்பட்ட வீர வசனங்களும், ஆவேச பேச்சுகளும் பொதுக்கூட்டத்தில் கட்சிக்காரர்களின் கைதட்டலை பெறுவதற்கு மட்டுமே பயன்படும்; காரியம் சாதிக்க உதவாது என்பதை, முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

'புதிய கல்விக்கொள்கையில், ஹிந்தி திணிப்பு எங்கும் இல்லை; மூன்றாவது மொழியாக இந்தியமொழிகளில் ஏதாவது ஒன்றை கற்கலாம்' என்று மத்திய அரசு பலமுறை விளக்கியும், முதல்வர் இப்படி பேசுவது அரசியல் இன்றி வேறு என்ன?

மத்திய அரசு ஏதோ எதிரி நாடு என்பது போல் சித்தரித்து சவால் விடுவதும், வீர வசனம் பேசுவதும் அறிவுடைய செயல் அல்ல!

வடமாநில மக்களை கேவலமாக பேசுவதுடன்,அவர்கள் பன்றிகளைபோல், நிறைய பிள்ளைகளை பெறுவதாக ஓர் அமைச்சர் பேசுகிறார். மற்றொரு அமைச்சரோ, 'வடமாநில மக்கள் பானிபூரி விற்கதான் லாயக்கு' என்கிறார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், கிராமப்புற மக்களின் கல்வியறிவு குறைவு தான். அதனால், பிழைப்பிற்காக வேறு மாநிலங்களுக்கு சென்று, தங்களுக்கு தெரிந்த தொழில், வியாபாரம் செய்கின்றனர். இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது?

அப்படிப் பார்த்தால், ஊழல் வழக்குகளில் ஜாமின் எடுக்கக் கூட, கபில் சிபல், மனு சிங்வி, முகுல் ரோகத்கி போன்ற வட மாநில வழக்கறிஞர்களை தானே தி.மு.க., தலைவர்கள் நாடுகின்றனர்?

தேர்தல் வியூகம் வகுக்க, வடமாநில பிரஷாந்த் கிஷோர் தானே தேவைப்பட்டார்? அப்போதெல்லாம் அவர்கள் வடமாநிலத்தவராக தெரியவில்லையா?

தி.மு.க., ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது; கூலிப்படைகளை வைத்து நிகழ்த்தும் கொலைகள் அதிகரித்துள்ளன. பாலியல்குற்றங்கள், போதை மருந்து கடத்தல்... என தினமும் பல குற்றச்செயல்கள் அரங்கேறுகின்றன.

யு-டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து அராஜகம் செய்தவர்களை கைது செய்ய முடியாத நிலையில்தான் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு உள்ளது!

இத்தவறுகளை எல்லாம் மறைக்க, மொழி, இனத்தின் பெயரால், பிரிவினைவாத அரசியல் செய்கிறது, தி.மு.க., அரசு. ஆனால், இத்தகைய பேச்சுகளை கேட்டு கேட்டு மக்களுக்கு அலுத்துவிட்டதை, யார் தான் இவர்களிடம் கூறப் போகின்றனரோ!



தீர்மானம் சரியா?


எஸ்.சந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடம், மஹாத்மா காந்தி சமாதி உள்ளிட்ட பல இடங்கள், வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என்று, ஓர் அணுகுண்டு வீசப்பட்டது.

வக்பு வாரியத்தின் இந்த அடாவடிக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில், மத்திய அரசு, நாடு முழுதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து, வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க, 'வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா' கொண்டு வரப்பட்டு, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது, தமிழக அரசு.

வக்பு வாரிய சட்டத்தில் உள்ள ஆபத்தை உணராமல், ஏதோ சிறுபான்மையினரின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது போலவும், அவர்கள் உரிமைகளை பாதுகாத்தே தீருவோம் என்பதுபோல், இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது, தி.மு.க., அரசு.

திருச்சி அருகில் ஒரு கிராமத்தில் ௨,௦௦௦ ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உட்பட, அந்த கிராமமே வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றபோது, இந்த அரசு என்ன செய்து கொண்டு இருந்தது?

அண்ணா அறிவாலய கட்டடம் மற்றும் முரசொலி அலுவலக கட்டடம்உள்ளிட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்கள், பஞ்சமி நிலம் என்று ஒரு பிரச்னை நீண்ட நாட்களாக உள்ளது. 'அது பஞ்சமி நிலம் அல்ல; கழகத்துக்கு சொந்தமானது தான்' என்று இதுவரை நிரூபிக்கவில்லை, தி.மு.க.,

பார்லிமென்ட் கட்டடம்மற்றும் மஹாத்மா காந்தியின் சமாதிகளுக்கே உரிமைகோரும் வக்பு வாரியம், அண்ணா அறிவாலய கட்டடம், முரசொலி அலுவலக கட்டடம், ஆழ்வார்பேட்டை முதல்வர் இல்லம், முசிறி சுப்ரமணியம் சாலை கிளவுட் நைன் கட்டடம்.

வேளச்சேரி சன்ஷைன் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றுக்கும் நாளை உரிமை கொண்டாடும்; அப்போது, அப்படியே வாரியத்துக்கு துாக்கி கொடுத்து விடுவார் ஸ்டாலின்!

ஓட்டுக்காக எதை ஆதரிக்க வேண்டும் என்று இல்லையா?

மத்திய அரசு நிறைவேற்றிஉள்ள ஒரு சட்டத்தை எதிர்த்து, இங்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், மத்திய அரசு, தாங்கள் நிறைவேற்றியுள்ள சட்டத்தை, துாக்கி கடாசி விடுமா?








      Dinamalar
      Follow us