தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அண்ணாமலையின் வரலாறை காலம் பேசும்!

 அண்ணாமலையின் வரலாறை காலம் பேசும்!

 அண்ணாமலையின் வரலாறை காலம் பேசும்!

2


PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:12 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெ.ஜி.சுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., வரலாற்றில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஒரு தனித்துவமான அத்தியாயம் என்றே சொல்லலாம்!

கடந்த 1980லிருந்து இன்று வரை, பலர் மாநிலத் தலைவராக பணியாற்றி இருந்தாலும், அண்ணாமலையைப் போல், கட்சியை கடைக்கோடி வரைக்கும் எடுத்துச் சென்று, அதை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்தவர் எவரும் இல்லை.

கர்நாடக காவல் துறையில், 'சிங்கம்' என்று புகழ்பெற்ற அண்ணாமலை, தன் ஐ.பி.எஸ்., பதவியை துறந்து, 2021ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். 'என் மண், என் மக்கள்' யாத்திரை வாயிலாக, 234 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தினார்; 'டி.எம்.கே., பைல்ஸ்'களை வெளியிட்டு, பல அமைச்சர்களின் துாக்கத்தை கெடுத்தார். முதன்மை எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வை விட அண்ணாமலையே, தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார்.

கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கியை, 11 சதவீதமாக உயர்த்தி, பல தொகுதிகளில், அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளினார். ஆனாலும், டில்லி தலைமை, அண்ணாமலையின் எதிர்ப்பையும் புறந்தள்ளி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது.

விளைவு... நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 3 சதவீதமாக சரிந்தது.

சரி அதுதான் போகட்டும் என்றால், தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர்களான இல.கணேசன், தமிழிசை, முருகன் போன்றோருக்கு கவுரவமான பதவிகளை தந்த டில்லி தலைமை, தமிழகத்தில் கட்சியை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த அண்ணாமலைக்கு, உரிய அங்கீகாரம் தரவில்லை.

ஆனாலும் என்ன... வரலாறு அவருக்காக காத்திருக்கிறது; விதை விதைப்பவனை வெளியேற்றினால் தோட்டம் உருவாகாது; விதைப்பவன் விதைத்த விதை வேறொரு தோட்டத்தில் நாளை மரமாக வளரும் போது, இன்று வெளியேற்றியவர்கள் நிழலுக்காக அம்மரத்தை தேடி வருவர்.

இதோ... விதை விதைத்து விட்டார் அண்ணாமலை!

காலம், அவரின் வரலாறு பேசும்!

மக்கள் தந்த 'சுனாமி' தண்டனை!


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து, 'இது அரசியல் சுனாமி இல்லை; சினிமா சுனாமி' என்று கூறியுள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

தி.மு.க.,வின் வரலாற்றை ஸ்டாலின் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்...

ஏழை பங்காளன், நேர்மையாளர், கர்ம வீரர் என்று பெயரெடுத்த காமராஜர், 1967ல் ஆட்சியை இழக்கக் காரணம் யார்?

அண்ணாதுரை என்ற சுனாமி தானே?

அவர் எங்கிருந்து வந்தார்? நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், ரங்கோன் ராதா போன்ற திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி, தன் எழுத்தாற்றலால் மக்களை கவர்ந்து, பேச்சாற்றலால் அரசியலுக்கு வந்தவர் தானே!

கூடவே, தி.மு.க.,வின் ஊதுகுழலாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் படங்களில் உதயசூரியன் சின்னத்தை மக்களிடம் சேர்த்தார்.

இன்றைய விஜய் போல், அன்று, எம்.ஜி.ஆர்., மீது அன்பு கொண்ட மக்கள், அவருக்காக, தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தனர்.

இது சினிமா சுனாமி இல்லையா?

அதேபோன்று, பல திரைப்படங்களுக்கு காரசாரமாக வசனம் எழுதி புகழ் பெற்றதால் தானே, அண்ணாதுரையின் மறைவிற்கு பின், குறுக்கு வழியிலாவது கருணாநிதி ஆட்சிக்கு வர முடிந்தது; தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கவும் முடிந்தது!

தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டதும், அ.தி.மு.க., என்ற கட்சியை ஆரம்பித்து, தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார்; அவரது மறைவிற்கு பின் ஜெய லலிதா தி.மு.க.,விற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

இப்படி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என இரண்டு சினிமா சுனாமிகளைக் கண்டது தானே தமிழகம்!

அவ்வளவு ஏன்... குறுக்கு வழியில் புகழ்பெற, ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என்ற திரைப்படங்களிலும், 'குறிஞ்சி மலர்' என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தவர் தானே ஸ்டாலின்? தனக்கு சுனாமி உருவாகவில்லை என்றதும், தன் மகன் உதயநிதியை நடிக்க வைத்தார். அவரது அரிதாரத்தை பார்த்து, சுனாமி வீசுவதற்கு பதில், தியேட்டர்கள் அல்லவா காற்று வாங்கியது!

எனவே, என்னதான் விஜயை வசைபாடி வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தினாலும், ஆட்சி மாற்றம், தி.மு.க.,விற்கு மக்கள் தந்த தண்டனை; தி.மு.க., எனும் கட்சியின் பெயரில் ஸ்டாலின் குடும்பம் நடத்தி வந்த கம்பெனியின் மூடு விழா என்பதை மறந்து விடக் கூடாது!

ஒகேனக்கலுக்கு புதிய ரயில் பாதை அமையுமா?


கே.மணிவண்ணன்,சூலுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங் களில் ஒன்று, தருமபு ரி!இம்மாவட்டத்தில் சுற்றுலா தலம் என்றால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மட்டும் தான்!தென்னகத்தின் நயாகரா என்றழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சியை காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

பண வசதி படைத்தோர் கார்களிலும், வசதியற்றோர் ஜோலார்பேட்டை மற்றும் மொரப்பூர் வந்து, அங்கிருந்து பேருந்துகளிலும் ஒகேனக்கல் வருகின்றனர்.

நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள், குறைந்த பொருட்செலவில் வந்து செல்ல ஏதுவாக, தருமபுரியில் இருந்து, 47 கி.மீ., துாரத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு புதிய ரயில் பாதை அமைத்து, ரயில் சேவை வழங்க வேண்டும்.

ஏற்கனவே, கன்னியாகுமரியையும், காஷ்மீரையும் இணைக்கும் ரயில் பாதை, தருமபுரி வழியாக செல்கிறது. மேலும், மொரப்பூர் - -தருமபுரி புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை, ஆந்திரா மற்றும் வடமாநில மக்கள் நேரடியாக ஒகேனக்கலுக்கு வர, இந்த புதிய ரயில் பாதை அமையும்.

அதேபோல் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்ட மக்களும் ரயில் வாயிலாக வர முடியும்.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்கள் பெருகி, இம்மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பட்டு வாழ்வாதாரமும் மேம்படும்.

எனவே, மத்திய ரயில்வே அமைச்சர், தருமபுரி - ஒகேனக்கல் ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us