/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அரசை சங்கங்கள் ஆட்டுவிக்க கூடாது!
/
அரசை சங்கங்கள் ஆட்டுவிக்க கூடாது!
PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

ராம்கோ.பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் வெளியான ஒரு செய்தியை படித்தபோது, சங்கங்கள் அரசு நிர்வாகத்தை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, தன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வு செய்தார். அப்போது, அந்தந்த கிராமங்களில் பணியில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விளக்கம்கேட்டு, 'மெமோ' வழங்கி இருந்தார்.
இதைக் கண்டித்து, வருவாய் துறை தொடர்புடைய பல்வேறு சங்கத்தினர் இணைந்து, ஐந்து நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்; பின், இரு தரப்பும் பேச்சு நடத்தியதில், போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும், அவர் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருந்து பணிபுரிய வேண்டும் என்பது, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்களின் நடைமுறை விதி-, 14ல் உள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், 2011ல் ஒரு உத்தரவும் பிறப்பித்தது. இது தவிர, பல அரசு உத்தரவுகளும், இதைப் பின்பற்றுமாறு சொல்லி இருக்கின்றன.
ஆனாலும், 100க்கு 99 சதவீத கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணிபுரியும் கிராமங்களில் தங்குவது கிடையாது.
தற்போது, ஒவ்வொரு கிராம நிர்வாகஅலுவலருக்கும் மடிக்கணினி கொடுத்து விட்டதால், அலுவலகம் பக்கம் எட்டிப் பார்க்காமலேயே, வெளியில் இருந்தே வேலைகளை முடித்து விடுகின்றனர்.
சான்றிதழ் வாங்கித் தரவும், 'சம்திங்'வசூல் செய்து தரவும், தனி 'ஏஜென்ட்'களை நியமித்துக் கொள்கின்றனர். இதனால், அவர்கள் அலுவலகம் வரவேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிகமாக சிக்குபவர்களும், தண்டனை பெறுபவர்களும் இவர்களே!
கிராம நிர்வாக அலுவலர், அலுவலகபக்கம் வராததால், அவரது உதவியாளரும்வருவதில்லை. அவர்களால் நியமனம் பெற்ற ஏஜென்ட்கள் தான், இவர்களுக்கானபெரும்பாலான வேலைகளை செய்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை பார்க்கவே, பல நாட்கள் அலைய வேண்டிஉள்ளது.
இந்த நிர்வாக குறைபாட்டை சரி செய்வது,தாசில்தார் புஷ்பலதா போன்ற அதிகாரிகளின் தலையாய கடமை. இதற்காக அவர், நிர்வாக ரீதியான வழிமுறைகளை தான் கடைப்பிடித்துள்ளார். இதற்கு, வருவாய் துறையினரும் உரிய முறையில்பதில் தந்திருக்க வேண்டும்; அதை விடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது நியாயமல்ல.
இவர்கள் போராட்டத்தால், பொதுமக்களுக்கு, வருவாய் துறையினர் அளிக்க வேண்டிய ஐந்து நாள் சேவைகள் முடங்கி போய்விட்டன.
இவ்வாறு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நாட்களை தற்காலிக பணிநீக்கம் செய்த நாட்களாகக் கருதி, அதற்கான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். பணி பதிவேட்டிலும் இதை பதிவு செய்ய வேண்டும்.
அரசு அதற்கான முயற்சிகளை எடுத்து, தேவையற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், இதேபோல தேவையற்ற போராட்டங்கள்தமிழகத்தில் பல இடங்களுக்கும், பல துறைகளுக்கும் கொரோனா போல பரவிவிடும்.
தங்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. எந்த தவறுகளை செய்தாலும், சங்கங்கள் நம்மை காப்பாற்றிவிடும் என்ற அசாத்திய துணிச்சலால், என்ன வேண்டுமானாலும் செய்து அரசு இயந்திரத்தை முடக்கி விடலாம் என்ற எண்ணம் மேலோங்கி விடும்.
பு னித பணியில் புல்லுருவிகள்!
டாக்டர்
டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை, விருதுநகர்மாவட்டத்திலிருந்து
அனுப்பிய,'இ -மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு
பள்ளியில், மாணவியரை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்று, மது
வாங்கிக் கொடுத்து அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக,உடற்கல்வி ஆசிரியர்
கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு காலத்தில், ஒவ்வொருபள்ளியிலும்,
மாணவியருக்குவிளையாட்டுப் பயிற்சிஅளிக்க, பெண் உடற்கல்வி ஆசிரியர்கள்
பணியில் இருந்தனர். வெளிஇடங்களுக்கு போட்டிக்காகமாணவியரை
பாதுகாப்பாகஅழைத்துச் செல்லும் பொறுப்பையும் அவர்களேஏற்றுக்கொண்டனர்.
ஆனால், இன்று பெரும்பாலான இருபாலர் பள்ளிகளில், ஆண் உடற்கல்வி ஆசிரியர்களே மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளிப்பதாகத் தெரிகிறது.
மாணவருக்கு,
ஒழுக்கம்,காலம் தவறாமை, கூட்டுமுயற்சி போன்ற நற்பண்புகளை, விளையாட்டுப்
பயிற்சி கற்றுக் கொடுக்கும்என்று கூறப்படுவதுண்டு.
அத்தகைய நற்பண்புகளை மாணவர் மனதில் விதைக்க வேண்டிய ஆசிரியரே, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.
ஆசிரியரை,
பெற்றோருக்கும், தெய்வத்துக்கும் நிகராகப் போற்றிய காலம் மாயமாகி
விட்டதோஎன்று சந்தேகம் எழுகிறது.தெய்வத்துக்கு நிகராகப் போற்றக்கூடிய
தகுதியை மறந்து சில ஆசிரியர்கள், முறைகேடாக நடந்து கொள்வதும் பாலியல்
ரீதியாக மாணவியருக்கு தொல்லை கொடுப்பதும், ஆசிரியர் சமுதாயத்திற்கே
அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
'உலகில், இரண்டு புனிதமான இடங்கள்
உள்ளன. ஒன்று, தாயின் கருவறை; அங்கு மனிதன்உயிர் பெறுகிறான். மற்றொன்று,
ஆசிரியரின் வகுப்பறை; அங்குதான் மனிதன் உயர்வு பெறுகிறான்' என்று,பெரியோர்
சொல்வர்.
மாணவர்களும், தங்கள்கடமையை மறந்து, தவறான பாதையில்
பயணிப்பதும், ஆசிரியர்களையே வெறிகொண்டு தாக்குவதும், சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன. துாத்துக்குடி உடற்கல்வி ஆசிரியர் போன்ற ஒரு சில ஆசிரியர்களாலும்,
ஒழுக்கங்கெட்ட சில மாணவர்களாலும், பள்ளிகளின் பெயர் கெட்டுப்போகிறது.
மிகச் சிறப்பானமுறையில், கவனத்துடன் தொண்டாற்றும் ஆசிரியர்கள் மத்தியில், இத்தகைய புல்லுருவிகள் இருப்பது வேதனைக்குரியது!
பிராம ணர்கள் செய்த தவறு!
ஆர்.பிச்சுமணி,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்'கடிதம்: கொஞ்ச நாட்களுக்கு முன்,
பிராமணர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் தேவை குறித்து, ஒரு கூட்டம்
நடைபெற்றது.
கடந்த 70 ஆண்டுகளாக, பிராமண ஜாதியை இழிவுபடுத்துவது
என்பது,திராவிடக் கட்சிகளின் பிழைப்பு. இதை முளையிலேயே கிள்ளி எறிய மறந்த
பிராமணர்கள், தங்கள் மக்கள் தொகையைஏன் உயர்த்திக் கொள்ள வில்லை? உயர்த்தி
இருந்தால், அந்த ஓட்டுசதவீதத்துக்கு பயந்து, திராவிடக் கட்சிகள்
கூழைக்கும்பிடு போடுவரே?
வேறு இடங்களுக்கு ஏன்சென்றனர்?
வீரதீரத்துடன்இங்கேயே இருந்து பிழைப்புநடத்தி இருக்கலாமே?'எல்லாவற்றையும்
கடவுள்பார்த்துக் கொள்வார்' என்றுஇருப்பது தவறு; முயற்சிசெய்தால்,
அதற்குரிய பலனைத்தான் கடவுள் தருவார்.
இனியாவது சிந்தியுங்கள்!