/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தமிழக மக்கள் என்ன செய்ய போகின்றனர்?
/
தமிழக மக்கள் என்ன செய்ய போகின்றனர்?
PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : ----------------------------------------------- பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு, ஐக்கிய ஜனதா தள கட்சி முதல்வர் நிதிஷ் குமாரின் சிறப்பான ஆட்சியே காரணம்!
கடந்த 2020 சட்டசபை தேர்தலின் போது, தான் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே மதுவிலக்கை அமல்படுத்துவது தான் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார், நிதிஷ் குமார். அதேபோன்று, ஆட்சிக்கு வந்தபின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியும் காட்டினார்.
இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நிதிஷ்குமார் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
இதுவே, தற்போதைய தேர்தலில், பெண்களின் ஓட்டுகள் பெருமளவில் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு கிடைக்கக் காரணம்!
அதேசமயம், குடும்ப அரசியலை பீஹார் மக்கள், குறிப்பாக பெண்கள் ஏற்கவில்லை.
நிதிஷ் குமாரின் ஊழலற்ற ஆட்சிக்கு முன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தேஜஸ் வியும், காங்., - எம்.பி., ராகுலும் காட்டிய இலவச ஆசைக்கு அவர்கள் விலை போகவில்லை.
மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்து, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசி, வெற்றிக் கனவில் மிதந்த, 'இண்டியா' கூட்டணிக்கு, அம்மாநில மக்கள் சரியான பதிலடி கொடுத்து விட்டனர்.
'பீஹாரிகள் கல்வி அறிவற்றவர்கள், பான்பராக் வாயர்கள், பன்றிகளை போல் நிறைய குழந்தைகள் பெறுபவர்கள்' என்று தி.மு.க.,வினரால் ஏளனம் செய்யப்பட்ட மக்கள் இன்று, தாங்கள் இலவசத்துக்கு மயங்கும் முட்டாள்கள் அல்ல என்று நிரூபித்து விட்டனர்.
கல்வியில் சிறந்த தமிழக மக்கள் என்ன செய்யப்போகின்றனர்... போலி வாக்குறுதிகளுக்கும், இலவசத்திற்கும் மயங்கப் போகின்றனரா... இல்லை தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்துவோருக்கு ஓட்டளிக்கப் போகின்றனரா?
lll
புகழுக்கு மயங்கலாமா? பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம்,
கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாநில கட்சியான
தி.மு.க.,வை அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டி கட்டுரை
எழுதுகின்றனர்' என்று, தி.மு.க.,வின் 75வது ஆண்டு விழாவில்
பெருமைப்பட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
'தி.மு.க., என்ற
கட்சியை துவக்கி, 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்காக, ஒரு புத்தகம்
வெளியிடுகிறோம். அதில், உங்களுடைய வாழ்த்தும் இடம்பெற வேண்டும்' என்று
கேட்டுக் கொண்டால், எதிர்க்கட்சிகள் கூட அரசியல் நாகரிகம் கருதி, நாலு
வார்த்தை நல்ல விதமாக பாராட்டி எழுதத்தான் செய்வர். இதில் முதல்வர் பெருமை
கொள்ள என்ன இருக்கிறது?
அதேபோன்று, பிரதான கட்சியுடன் கூட்டணி வைக்கும் சிறு கட்சிகள், சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் புகழ்வது வழக்கமானது தான்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் இருக்கும் முதல்வர், கூட்டணி
கட்சிகள் புகழ்வதை எல்லாம் உண்மை என்று நினைக்கும் அளவிற்கா அறியாமையில்
உள்ளார்?
தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கும் போது புகழ்வார்;
அ.தி.மு.க.,விற்கு தாவி விட்டால் இகழ்வார். இது தானே கழகங்களின் அரசியல்
பாலபாடம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தபோது, 'குடும்ப
அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தை குழிதோண்டி புதைக்கிறது தி.மு.க.,' என்று
வசைபாடினார், கமல்ஹாசன்.
இன்று, தி.மு.க., கூட்டணியில் இணைந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டார்.
இப்போது அவர் தி.மு.க.,வை புகழாமல் இகழவா செய்வார்?
'ஈழத்தமிழர்களை காப்பாற்ற தவறிய கருணாநிதி தமிழினத் தலைவர் அல்ல;
தமிழினத்தின் துரோகி' என்று வசைபாடிய ம.தி.மு.க., தலைவர் வைகோ,
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தபின், கருணாநிதியை புகழவில்லையா?
எலும்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் வளையும். அதையெல்லாமா உண்மை என்று நம்பி, முதல்வர் பெருமை கொள்வது!
lll
சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்! அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட
போர்களினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை விட, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தான்
நம் நாடு அதிக உயிர் இழப்புகளை சந்தித்துள்ளது.
பயங்கரவாத
அமைப்புகள், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்கின்றன. அவர்களும் கூப்பிய
கரங்களுக்குள் குண்டுகளை வைத்துக் கொண்டு நம்மிடையே இரண்டறக் கலந்து
வசிக்கின்றனர்.
இவர்களால், நம் நாடு ஏராளமான உயிரிழப்புகளை
சந்தித்து விட்டது. சமீபத்தில் கூட பஹல்காமில், இவர்களது ஒத்துழைப்புடன்,
சுற்றுலா பயணியர், 26 பேரை சுட்டுக் கொன்றனர், பாகிஸ்தான் பயங்கர வாதிகள்.
அதற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள்
புகுந்து நம் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஜெய்ஷ் - இ -- முகமது
பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்கள் பலர்
கொல்லப்பட்டனர்.
அதற்கு பழி தீர்க்க காத்திருந்தவர்கள், தற்போது டில்லியில் காரில் வெடிகுண்டு வைத்து, 13 அப்பாவிகளை கொன்றுள்ளனர்.
இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் மெத்தப் படித்த
மருத்துவர்கள்; அதில் ஒருவர் பெண் மருத்துவர். பெண்கள் பயங்கரவாத அமைப்பின்
தலைவராக செயல் பட்டுள்ளார்.
மதத்தின் பெயரால் மதம் பிடித்த இந்த
மனித பதர்கள், நம் வரிப்பணத்தில் உயிர் வாழ்ந்து, நமக்கெதிராக
செயல்படுகின்றனர் என்றால், இவர்கள் எந்த அளவு மதவெறி பிடித்தவர்களாக
இருக்க வேண்டும்!
இவர்களைப் போன்ற ஒயிட் காலர் பயங்கரவாதிகள்
இன்னும் எவ்வளவு பேர் நம்முடன் கலந்துள்ளனரோ... மத்திய அரசு விரைந்து
இவர்களை களை எடுக்க வேண்டும். அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்யும் அனைவரையும் குற்றவாளி
கூண்டில் ஏற்றி சிறையில் தள்ளுவதுடன், அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய
வேண்டும்.
தற்போது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிய, அதற்கு
உறுதுணையாக இருந்த ஐந்து மருத்துவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து,
உயிரிழந்த, 13 பேரின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.
பயங்கரவாத செயல்களுக்கு பக்கபலமாக இருப்போருக்கு இந்நாட்டில் கைபிடி மண் கூட சொந்தமாக இருக்கக் கூடாது. மத்திய அரசு இதை செய்யுமா?
lll

