sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எது தி.மு.க.,வின் வாயை கட்டிப்போட்டது?

/

எது தி.மு.க.,வின் வாயை கட்டிப்போட்டது?

எது தி.மு.க.,வின் வாயை கட்டிப்போட்டது?

எது தி.மு.க.,வின் வாயை கட்டிப்போட்டது?

2


PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தகவல்களை பெற்று, அதை மத்திய அரசுக்கு எதிரான பிரசாரங்களுக்கு பயன்படுத்துவது தி.மு.க.,வின் வழக்கம். இதன் வாயிலாக, தங்கள் ஆட்சியின் மீதுள்ள மக்களின் கோபத்தை, தற்காலிகமாக மடைமாற்றம் செய்யும்.

தற்போது மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு, 2,532 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது; ஆனால், தமிழுக்கு, 149 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளது என்ற பழைய பஞ்சாங்கத்தை புரட்டியுள்ளது.

சரி... சமஸ்கிருதத்திற்கு, 18 பல்கலைகள்உள்ளன; தமிழுக்கு எத்தனை உள்ளன? தமிழகத்தை ஆறுமுறை ஆண்ட தி.மு.க., தமிழுக்காக ஏன் ஒரு பல்கலை கூட அமைக்கவில்லை என்று கேட்டால், அதற்கு பதிலைக் காணோம். ஆனால், நிதி மட்டும் வேண்டுமாம்!

இல்லாத பல்கலைக்கு எங்கிருந்து நிதி வரும்?

தமிழைப் போலவே சமஸ்கிருதமும் ஒரு தொன்மையான மொழி. இந்நாட்டின் இதிகாசங்கள், புராணங்கள், வேதங்கள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் அனைத்தும் அம்மொழியில் தான் உள்ளன. அதனால் தான், சமஸ்கிருதத்தை தேவமொழி என்கின்றனர்.

வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுவதுபோல், அது ஒன்றும் செத்த மொழி அல்ல; நாடு முழுதும் கோவில்களிலும், திருமணங்கள், வேள்விகள், யாகங்கள், கும்பாபிஷேகங்களில் அம்மொழி ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது!

மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்மாநில மொழிகள் முதல், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதம் கலந்து தான் இருக்கிறது. பின், எப்படி அது செத்த மொழியாகும்?

இன்று தமிழுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் தி.மு.க., மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்தபோது என்ன செய்தது?

அப்போதும், சமஸ்கிருதத்திற்கு தானே அதிக நிதி ஒதுக்கப்பட்டது...

அப்போது காங்., ஆட்சியாளர்களை பார்த்து கேட்டிருக்க வேண்டியது தானே... தமிழுக்கு ஏன் துரோகம் இழைக்கிறீர்கள் என்று!

எது தி.மு.க., ஆட்சியாளர்களின் வாயை கட்டிப்போட்டது?

பல மொழிகள், வேறுபட்ட கலாசாரங்கள் கொண்டது இந்தியா. அதில் ஒரு மொழியை உயர்த்துவதும், மற்றதை தாழ்த்துவதும் அறிவுடைய செயல் அல்ல!

'உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு' என்று கோஷம் போட்டபடி, தங்கள் பிள்ளைகளை ஹிந்தி தானே படிக்கவைக்கிறீர்கள்.

பிரதமர் மோடி உலகெங்கும் திருக்குறளின் பெருமைகளை பேசி வருகிறார், நிதியமைச்சர் பார்லிமென்டில் உரையாற்றும்போது அடிக்கடி தமிழ் பாடல்களை மேற்கோள் காட்டுகிறார். காசி தமிழ் சங்கமம் இன்று சிறப்பாக நடைபெறுகிறது.

அப்படியிருக்கையில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் மீது, தமிழக அரசியல்வாதிகள் வெறுப்பை உமிழ்வது, பிரிவினைவாத, சுயநல அரசியலின் வெளிப்பாடே!



இளைஞர்களே ஏமாறாதீர்கள்!


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் போது, 'நம் கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்கள் எதிர்காலம் வளமாகும். இளைஞர்கள் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அவர்களை அரவணைத்து நல்லாட்சி தருவது தான் நம் கட்சியின் நோக்கம்...' என, மனம் கவர பேசுவர்.

தேர்தலில் வென்ற பின், 'நீ யாரோ, நான் யாரோ' நிலை தான்!

அவசர தேவை என தலைமையை தேடிப் போனால், கட்சி நிதி, நிவாரண நிதி என பட்டியல் போடுவரே தவிர, உதவி செய்ய மாட்டர்.

'பல தலைமுறையாக கட்சியில் இருக்கிறோம்...' என்று கூறினால், 'அதற்கு என்ன... நீ மட்டுமா இருக்கிறே....வேறு சொல்லு!' என்பர்.

'நான் கட்சிக்காக நிறைய உழைத்துள்ளேன்...' என்றால், 'அது தான் கட்சி கூட்டம், போராட்டம் என வரும் போது காசு வாங்குகிறாயே...' என அவமானப்படுத்துவர்.

என்னதான் தேர்தல் நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைத்தாலும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்!

கட்சிக்காக உழைத்து, பலருக்கு பகையாவதுடன், காரியம் வேண்டி போனால் அவமானம் தான் மிஞ்சும்.

அதனால், இளைஞர்களே... உங்கள் தனி திறமையை வைத்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்; அரசியல்வாதிகளை நம்பி ஏமாறாதீர்கள்!



சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா?


சு.செல்வராஜன், கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --------------------------------நடந்து முடிந்த மதுரை முருக பக்தர் மாநாடு, தி.மு.க., வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்து, தி.மு.க.,வை வதம் செய்து, எதிர்க்கட்சித் தலைவரானார், தே.மு.தி.க., கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த். அதுபோல், இம்முறையும் ஏடாகூடமாக நடந்து விடக் கூடாது என்று அச்சத்தில் உள்ளது, தி.மு.க.,

ஆனால், அதை மறைத்து, தி.மு.க., வெற்றிக்காகத் தான் ஹிந்து முன்னணியினர் மாநாடு நடத்தியது போல், 'நுாறு மாநாடு நடத்தி சேர்க்கும் ஓட்டுகளை, எங்களுக்கு கொடுத்து விட்டனர்...' என்று உளற ஆரம்பித்து உள்ளனர்.

கூடவே, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு நன்றி பாராட்ட கிளம்பி விட்டனர்.

ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்குத் தான் தி.மு.க.,வினர் நன்றி சொல்ல வேண்டும். காரணம், புலி வாலைப் பிடித்த புண்ணியவான் அவர் தான்!

'அவுட் ஆப் கன்ட்ரோல்' என்று தன்னைத் தானே பாராட்டி, அக மகிழ்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின், தன் ஆதரவில் வெற்றி பெற்ற ஒருவர், அவுட் ஆப் கன்ட்ரோல் ஆனதை தடுக்கத் தவறியதால், இன்று தி.மு.க., புலம்ப ஆரம்பித்து விட்டது.

கட்டுப்பாடு இழந்த கப்பல் கரை போய் சேர்வதில்லை!

மாநாட்டில் அண்ணாதுரையின் வீடியோ வெளியிட்டதற்காக குதிக்கின்றனர் தி.மு.க.,வினர்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அண்ணாதுரையின் தாரக மந்திரத்தை மறந்து விட்டு, நாத்திகத்தை பிடித்துக் கொண்டு தொங்கும் இவர்களுக்கு, அண்ணா துரையை சொந்தம் கொண்டாட அருகதை உள்ளதா?

ஹிந்து முன்னணியினருக்கு கண்டனம் தெரிவித்ததோடு பிரச்னைக்கு அ.தி.மு.க., முற்றுப் புள்ளி வைத்து விட்டது. ஆனால் இவ்விஷயத்தை வீடு வீடாக எடுத்துச் செல்ல உள்ளதாக கூறுகிறார், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா.

ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், இப்படி எதையாவது சாக்கு வைத்து தானே மக்களை சந்திக்க முடியும்!








      Dinamalar
      Follow us