sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பதிலென்ன முதல்வரே?

 பதிலென்ன முதல்வரே?

 பதிலென்ன முதல்வரே?


PUBLISHED ON : பிப் 15, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026 05:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரா.கணேசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 20௧3 - 14ல் காங்கிரஸ் ஆட்சியில், ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------தற்போதைய காங்கிரஸ் தலைவர் கார்கே, ரயில்வே அமைச்சராகவும், வேட்டி கட்டிய தமிழரான சிதம்பரம், நிதியமைச்சராகவும் இருந்தனர்.

அப்போது, அவர்கள் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கியது, 922 கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆண்டு ஒன்றிற்கு, 879 கோடி ரூபாய் தான் ஒதுக்கியது காங்., அரசு. தற்போது, பா.ஜ., அரசு ஒதுக்கியிருப்பதோ, 7,611 கோடி ரூபாய்; கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு.

இதுகுறித்து என்றாவது வாய் திறந்திருப்பாரா முதல்வர் ஸ்டாலின்? ஆனால், நிலத்தை கையகப்படுத்த நிதியை காரணம் காட்டி இன்று பொங்கியெழுகிறார். இத்தனை காலம் உறக்கத்தில் இருந்தாரா?

ஏன் இதை முன்பே ரயில்வே துறை அமைச்சரிடம் எடுத்துச் செல்லவில்லை?

எதற்கெடுத்தாலும் நிதி கேட்டு பஞ்சப்பாட்டு பாடும் தமிழக அரசு, எப்படி தன் வருவாயை நிர்வகிக்கிறது என்பதை பார்ப்போம்...

'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற அடிப்படையில், தி.மு.க.,வின், 2025 - -26 நிதியறிக்கையை ஆய்வு செய்தால், அரசுக்கு வருவாய், 3.30 லட்சம் கோடி ரூபாய்.

இந்த நிதியில், மத்திய அரசின் வரிவிதிப்பில், மாநிலத்தின் பங்கு, 58,000 கோடி ரூபாய்; மத்திய அரசு தனக்கு வரும் சொந்த வருவாயில் இருந்து தமிழகத்திற்கு தந்த, 28,000 கோடி ரூபாயும் அடங்கும்.

இதே நிதியாண்டில் மாநிலத்தின் செலவு, 4.40 லட்சம் கோடி ரூபாய். அதாவது, 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி செலவு செய்துள்ளது!

இலவச திட்டங்களான, இலவச பஸ், உரிமைத்தொகை, மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் போன்றவற்றிற்கு, 1.53 லட்சம் கோடி ரூபாயும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என, 1.30 லட்சம் கோடி ரூபாயும் செலவிடுகிறது.

வாங்கும் கடன்களுக்கு, 71,000 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறது.

மூலதன செலவுகள் அதாவது, சாலை, பாலம் அமைப்பது போன்றவற்றிற்கு, 57,000 கோடி ரூபாய் செலவிடுகிறது.

இதில், ஸ்டாலின் கூறுகிறார்... கன்னியாகுமரி - -திருவனந்தபுரம் அகல ரயில்பாதை இரட்டிப்பு திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசு எதிர்பார்க்கும், 290 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து வராததால், திட்டம் நிற்கிறது என்று!

ஐயா ஸ்டாலின் அவர்களே... மொத்தம், 3.30 லட்சம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரும் மாநிலத்தில், ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு குறையாது கடன் வாங்கும் நிலையில், ௨ 90 கோடி ரூபாய் இல்லாமல் போய் விட்டதா? முதலில் செலவழித்து பின் பெற்றுக்கொள்வதில் அப்படியென்ன பிரச்னை?

இத்தொகையை, துணை முதல்வர் உதயநிதியிடமோ அல்லது அவரது நண்பர்களிடம் கேட்டாலே கடனாக கொடுப்பரே!

கிட்டத்தட்ட, 41 கி.மீ., நீளமுள்ள மன்னார்குடி -- பட்டுக்கோட்டை வழித்தடம் மற்றும் 52 கி.மீ., நீளமுள்ள தஞ்சாவூர் -- பட்டுக்கோட்டை வழித்தடம் -என, இவை இரண்டிற்கும் இன்னும் நிலங்களை கையகப்படுத்தும் பணியே துவங்கவில்லை என்றும், 20 கி.மீ., நீளமேயுள்ள ராமேஸ்வரம் - -தனுஷ்கோடி ரயில் வழித்தடத்திற்கு, 2019லேயே பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், இன்னும் நிலம் பெறப்படவில்லை என்பதும் தான், ரயில்வே துறை அமைச்சரின் குற்றச்சாட்டு.

இதற்கு உங்கள் பதிலென்ன முதல்வரே?

lll

கருணைக்கும் விலக்கு உண்டா? ஜி.ராஜசேகரன், வங்கி மேலாளர் (பணி நிறைவு), சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில் சராசரியாக ஆண்டிற்கு, 37 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர்; 5,700 பேர் இறக்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டு மாதங்களில், 1,200 நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறி, விலங்கு நல ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாம்.

விலங்கு நல ஆர்வலர்கள், நாய்கள் மீது கொண்டிருக்கும் பற்று பாராட்டத்தக்கது தான்; அதேநேரம், நாய், பாம்பு, முதலை, சிங்கம், புலி மட்டும் தான் விலங்குகளா? அவைகளுக்கு மட்டும் தான், இவர்கள் கருணை காட்டுவரா?

ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற பாவப்பட்ட உயிரினங்கள் மீது இவர்கள் ஏன் கருணை காட்டுவதில்லை?

அவைகளை கொல்லக் கூடாது என்று ஏதாவது ஒரு விலங்கு நல ஆர்வலர் புகார் கொடுத்துள்ளரா? அப்படி கொடுத்தாலும், அதை அரசு தான் ஏற்றுக் கொள்ளுமா?

நாய்களுக்கும், அவற்றுக்கும் என்ன வித்தியாசம்? நம் நாட்டின், 'செவன் சிஸ்டர்ஸ்' என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில், நாய் கறி சாப்பிடுவதைப் போல், பிற மாநில மக்களும் நாய் மாமிசத்தை சாப்பிட முடியும் என்றால், அப்போது நாய்கள் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்வரா?

'மிருக வதை' என்றால், எல்லா மிருகங்களும் ஒன்றுதானே?

நமக்கு சுவையான உணவு கிடைக்கிறது என்றால், எந்த சாதுவான மிருகத்தையும் கொல்லலாம்; அதுவே, நாம் உண்ண விரும்பாத விலங்குகள் என்றால், அது மனிதர்களுக்கு அச்சறுத்தலாக இருந்தாலும், அதை கொல்லக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

கருணை காட்டுவதிலும் விலக்கு உண்டா என்ன?

lll

தே ர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளுமா? தங்கவேலு மாரிமுத்து, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மா தங்களே உள்ளன. இந்நிலையில், எந்த மாநிலமாக இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சிக்கு பல விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். அதில், அரசு இயந்திரங்களை பயன்படுத்துவதில் அத்துமீறல்கள் என்பது நிச்சயமாக இருக்கும்.

இதை தடுக்கும் விதமாக, தேர்தல் தேதி அறிவித்த பின், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, இப்போது இருக்கும் அரசு, பதவி விலக வேண்டும். இந்த இடைக்காலத்தில், கவர்னரே அரசு நிர்வாகத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

அப்போது தான், ஆளுங்கட்சி, அதிகாரிகளை இஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கவோ, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ வாய்ப்பு இருக்காது; எல்லா கட்சிகளுக்கும் போட்டியில் சம வாய்ப்பு கிடைக்கும்.

தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ளுமா?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us