sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 17, 2026 ,சித்திரை 4, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

2


PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:

'தொகுதிகள் மறு வரையறை குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேச மறுக்கிறார்' என்று, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். தமிழகத்தில், 41 லோக்சபா தொகுதிகள் இருந்த நிலையில், 1971 லோக்சபா தேர்தலின்போது, 39 தொகுதிகளாக குறைக்கப்பட்டன. இது, மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் தானே நடந்தது. அப்போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிதான் நடந்தது. அப்போது, தி.மு.க., தலைமை அன்றைய மத்திய அரசை எதிர்த்து, வாய் திறக்காமல் மவுனம் காத்தது ஏன்?

அப்ப, காங்., கூட்டணியில் தி.மு.க.,வினர் இருந்தாங்க... கூட்டணி தர்மத்தை மதித்து, தமிழகத்தின் உரிமையை, 'காவு' கொடுத்துட்டாங்களோ?

நீலகிரி தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா பேச்சு:

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி., வரியை பிரித்து தருவதில், பா.ஜ., அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவது, முதல்வர் ஸ்டாலின் எனும் சக்தி. ஏனென்றால் ஸ்டாலின் தனி ஆள் கிடையாது; அவருக்கு பின்னால், ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் கருணாநிதி எனும் மாபெரும் சக்திகள் உள்ளன.

என்னமோ, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தை பட்டா போட்டு கொடுத்துட்ட மாதிரியே பேசுறாரே!

தமிழக காங்., மூத்த தலைவர் தங்கபாலு பேட்டி:

ஸ்டாலின் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்க, கூட்டணியில் உள்ள காங்., தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரு கிறேன். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விரைவில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, பிரசாரத்தில் ஈடுபடுவார்.

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஆறு நாட்கள் தான் இருக்குது... ஒருவேளை, 2029 லோக்சபா தேர்தல்ல ஸ்டாலினும், ராகுலும் சேர்ந்து பிரசாரம் பண்ணுவாங்களோ?

முதல்வர் ஸ்டாலினுக்கு, வேலுார் சட்டசபை தொகுதி வி.சி., கட்சி செயலர் இளங்கோவன் எழுதியுள்ள கடிதம்:

வேலுார் தொகுதியில்,தி.மு.க.,வேட்பாளர் கார்த்திகேயனின் வெற்றிக்காக உழைத்து வருகிறேன். கார்த்திகேயன், எங்களுக்கு வாகன வசதி, பொருளாதார உதவிகள் செய்வதில்லை. அவர் பிரசாரம் செய்யும் பகுதி மற்றும் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில், வி.சி., கட்சியினர், 10 பேர் மட்டும் வந்தால் போதும் என்கிறார். எங்கள் கட்சியினருக்கு மதிய உணவு கூட வாங்கி தருவதில்லை. இது, அவரது வெற்றியை தடுத்து விடுமோ என அஞ்சுகிறோம்.

வி.சி., கட்சியினர் தயவின்றியே ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில், தி.மு.க., வேட்பாளர் இருக்கிறாரோ?






      Dinamalar
      Follow us