sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

5


PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., துணை தலைவரும், நடிகையுமான குஷ்பு பேட்டி:

தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில், மக்கள் உற்சாகமாக இருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் ஒரு குழந்தை சளி பிடித்து தும்மினாலும் சரி... வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றாலும் சரி... பிரதமர் மோடி தான் காரணம் என, சொல்கின்றனர். அப்படியென்றால், ஸ்டாலின் ஏன் முதல்வராக இருக்க வேண்டும் என, மக்கள் கேள்வி கேட்க துவங்கி விட்டனர். இதனால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது.

'தமிழகத்தில், 11 சதவீதம் பொருளாதார வளர்ச்சி'ன்னு முதல்வர் அடிக்கடி சொல்றாரே... அது, மத்திய அரசின் உதவியில்லாம சாத்தியமாகியிருக்குமா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா பேச்சு:

தமிழகம் தற்போது பெற்றுள்ள வளர்ச்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியே காரணம். மாநிலங்களுக்கான நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில், ஹிந்தியை திணிப்பது போன்றவற்றை செய்து வருகிறது. மத்தியில் இருக்கும், பா.ஜ., ஆட்சியை எல்லாருக்குமான ஆட்சி என சொல்லிக் கொள்கின்றனர்; ஆனால், விவசாயிகள், ஏழைகளுக்கு எதிரான ஆட்சியாக அது உள்ளது.

இவர் சொல்றது உண்மையாக இருந்தால், வட மாநிலங்களில் உள்ள ஏழைகள், விவசாயிகள் பா.ஜ.,வை எப்படி தொடர்ந்து ஆதரிக்கிறாங்க?

காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சு:

பெண்களுக்கான நல்ல திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. காமராஜர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது போல், முதல்வர் ஸ்டாலின் பள்ளிகளில், காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். மீண்டும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

கொஞ்சம் விட்டால், 'வாழும் காமராஜர்' என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பட்டமே கொடுத்துடுவார் போலிருக்கே!

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: 'நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என, மத்திய அரசு சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொந்தளித்திருக்கிறார். மத்திய அரசு தான் நெல்லுக்கு உரிய விலை தரவில்லை. கொடுக்கிற மாநில அரசுகளை தடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா.

சென்னையில், 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஆரம்பத்தில் நிதி தராதபோதும், மாநில அரசே நிதி ஒதுக்கி, திட்டத்தை அமல்படுத்திய மாதிரி, மத்திய அரசை மீறி, நெல்லுக்கு உரிய விலையை கொடுத்துடலாமே!






      Dinamalar
      Follow us