PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

ஆர்.கதிர்வேலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் கமிஷனுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸ் ஓட்டுகளை திருடி பா.ஜ., பதவியில் அமர்ந்திருப்பதாக ஒரு மாய தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியதுடன், பார்லி மென்ட் கட்டடம் முதல் தேர்தல் கமிஷன் அலுவலகம் வரை காங்கிரஸ் கட்சி தலைமையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் ஊர்வலம் நடத்தி வேடிக்கை காட்டியுள்ளன.
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால், ஒரு நாள் அப்பொய்யை மக்கள் உண்மை என்று நம்பி விடுவர் என்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார், காங்., - எம்.பி., ராகுல்.
உண்மையில், வாக்காளர்களின் ஓட்டுகளை திருடி பதவியில் அமர்ந்திருப்பவர் எவர் தெரியுமா?
முன்னாள் காங்., - எம்.எல்.ஏ.,வும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் கர்நாடக தலைவருமான இப்ராஹிம், '2019ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் சித்தராமையா தோற்கும் நிலையில் இருந்தார். அப்போது, நானும் மற்றும் சிலரும் சேர்ந்து, 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம். அந்த தேர்தலில், 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் சித்தராமையா வெற்றி பெற்றார். நாங்கள் இல்லாவிட்டால், அவர் வெற்றி பெற்றிருக்கவே முடியாது' என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.
இதுமட்டுமல்ல... கர்நாடகாவில் காங்., கட்சியைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, ஓட்டு திருட்டு குறித்து ராகுல் கூறியுள்ளதற்கு மறுப்பு தெரிவித்து, 'பெங்களூரு மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் ஓட்டு திருட்டு நடந்தது உண்மை தான்; லோக்சபா தேர்தலில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது எங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான்...' என்று கூறியுள்ளார்.
இன்று ஓட்டு திருட்டு என்று அலறும் 'ராகுல்' காங்கிரசார், அப்போது, கண்ணை மூடிக்கொண்டு இருந்தனரா?
காங்கிரசின் தில்லாலங்கடி வேலைகளை, 'பளிச்'சென்று எடுத்துச் சொன்ன காரணத்திற்காக, ராஜண்ணாவை, கர்நாடக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர்.
இந்நிலையில், உலகிற்கே, 'திருமங்கலம்' பார்முலாவை அறிமுகப்படுத்திய தி.மு.க., ராகுலின் பொய் பேச்சுக்கு ஜால்ரா தட்டுகிறது. ஓட்டு திருட்டு குறித்து தி.மு.க., பேசலாமா?
அதுசரி... தான் திருடி பிறரை நம்ப மாட்டாள் தானே!
சட்டம் படித்தவருக்கு தெரியாமல் போனது ஏன்? கோ.பாண்டியன், செங்கல்
பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் மாநிலத்தில்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நிறைவடைந்த நிலையில்,
அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள, 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில்
இருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
அவர்கள் வேலைக்காக குடியேறியுள்ள மாநிலங் களிலேயே, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 36 லட்சம் பேரில், 7 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ள
நிலையில், விரைவில், அவர்கள் தமிழக வாக்காளர் களாக ஓட்டுரிமை பெற உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் உட்பட, 'இண்டியா' கூட்டணியை
சேர்ந்த வைகோ, துரைமுருகன், வேல்முருகன், திருமாவளவன் மற்றும் நாம் தமிழர்
கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் இதை எதிர்க்கின்றனர்.
'பீஹாரிகளை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது ஆபத்தானது, சட்ட
விரோதமானது, விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களின்
உரிமையில் தலையிடும் செயல். தேசத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முறையையும்
மாற்ற, தேர்தல் கமிஷன் முயற்சிக்கிறது' என்று விமர்சித்து உள்ளார்,
சிதம்பரம்.
ஒரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில், வேறு
மாநிலத்தவரை சேர்ப்பதால், விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின்
உரிமையில் த லையிடும் செயலாக கருதப்படும் எனில், ஒரு வேட்பாளர் தன் சொந்த
தொகுதியை விட்டு, வேறு தொகுதியில் அல்லது வேறு மாநிலத்தில் போட்டி யிடுவது
சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளர்களின் உரிமையில் தலையிடும் செயல் ஆகாதா?
எந்த ஒரு அரசியல் கட்சி யும், தொகுதி வாக்காளர்களின் விருப்பங்களை
அறிந்து, வேட்பாளர்களை நிறுத்துவது கிடையாது. டில்லியை சேர்ந்த காங்., -
எம்.பி., பிரியங்கா, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டது கூட,
அத்தொகுதி வாக்காளர் களின் உரிமையில் தலையிடும் செயல் தான்.
அதனால், பிரியங்காவை பதவி விலக கோருவாரா சிதம்பரம்?
வி.சி., தலைவர் திருமாவளவன், 'இது தமிழக வாக்காளர்களை பாதிக்கும்; தமிழக
அரசியல் தலைகீழாக மாறிப்போகும் . எந்த மாநிலத்தை சேர்ந்த வர்களாக
இருந்தாலும், தமிழகத்தில் ஓட்டுரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்'
என்று கூறியுள்ளார்.
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்
பெயர்ந்திருக்கும் பீஹார், உ.பி., ஒடிசா மக்களை வாக்காளர் பட்டியலில்
சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் இவர்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற
தென்மாநிலங்களில் இருந்து வந்த வர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் இடம்
பெற்றிருப்பது குறித்து வாய் திறக்காதது ஏன்?
ஒரு மாநிலத்தவருக்கு
மற்ற மாநிலத்தில் ஓட்டுரிமை மறுக்கப்பட்டால், வட மாநிலங்களில் வாழும்
லட்சக்கணக்கான தமிழர்களின் ஓட்டுரிமையும் மறுக்கப்படுமே!
அரசியலமைப்பு சட்டத் தின்படி, இந்திய குடிமகன் நாட்டின் எந்த பகுதியிலும் குடியிருக்கலாம், பணிபுரியலாம்.
குடியிருப்பின் அடிப்படையில் ஓட்டளிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது
என்பது இண்டியா கூட்டணியினருக்கு தான் தெரியவில்லை; சட்டம் படித்த
சிதம்பரத்துக்கும் தெரியாமல் போனது எப்படி?
எப்போது
முடிவுக்கு வரும் பேனர் கலாசாரம்? எம்.கலைவாணி, அருப்புக் கோட்டையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களை காப்போம்; தமிழகத்தை
மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி.
அவரது வருகையையொட்டி அருப் புக்கோட்டையில் அனைத்து பகுதியிலும் நுாற்றுக்கணக்கான பேனர்களும், போஸ்டர்களும் வைக்கப்பட்டன.
போக்குவரத்து அதிக முள்ள இடங்களில் சாலையின் இருபுறமும் கடைகளை மறித்து
பேனர்களை வைத்து பொது மக்களுக்கும், வியாபாரி களுக்கும் மிகப்பெரிய இடையூறை
ஏற்படுத்தினர்.
இவர்களுக்கு போட்டி யாக, தி.மு.க.,வினர் தங்கள்
தொகுதி அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி, பேனர் வைத்து தங்களது
விசுவாசத்தை காட்டினர்.
கடந்த 2019-ல் பேனர் சரிந்து விழுந்து,
இளம்பெண் ஒருவர் பலி யான வழக்கில், 'அரசியல் தலைவர்களின் முகத்தை தினமும்
தரிசனம் செய்யவேண்டும் என்று பொது மக்கள் எவரும் நினைக்கவில்லை,
தேவையில்லாமல் பேனர் வைப்பதை நிறுத்துங்கள்' என்று உயர் நீதிமன்றம்
கண்டித்திருந்தது.
ஆனாலும் அரசியல்வாதிகள் திருந்துவதாக இல்லை. கோமாளித்தனமான இந்த பேனர் கலாசாரம், தமிழகத்தில் என்று ஒழியுமோ தெரியவில்லை!