PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

ஆர்.ராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்திற்கான நிதியை வழங்க கோரி, பார்லிமென்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், வேண்டுமென்றே, தி.மு.க., ஆட்சியை கொடுமைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக, ஓரவஞ்சனையோடு மத்திய அரசு செயல்படுகிறது' என, முதல்வர் ஸ்டாலினும்...
'தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்புக்கு நிதி நிர்வாகம் காரணம் அல்ல; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையே காரணம்...' என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், மத்திய அரசின் மீது மொத்த பழியையும் சுமத்தி, தங்களை உத்தம புத்திரர்கள் போல் காட்டிக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் தமிழகம் மட்டுமல்ல; 27 மாநிலங்களும், எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அந்த மாநிலங்களில் ஏதாவது ஒன்று, மாநில அரசின் நிதி பற்றாக்குறைக்கும், வாங்கியுள்ள கடன்களுக்கும், மத்திய அரசு நிதி கொடுக்காததே காரணம் என்று கூறியுள்ளனவா?
ஆனால், திராவிட மாடல் அரசு, தும்மினால், இருமினால் கூட, 'மத்திய அரசு நிதி கொடுக்காததால் தான் தும்மலும், இருமலும் வருகிறது' என்று சதா குற்றஞ்சாட்டுகிறது.
தங்கள் அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, மத்திய அரசின் மீது பழி சுமத்தி தப்பிக்க பார்க்கிறது.
இதைவிட கேலிக்கூத்து, 'கடந்த 75 ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தான் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில், ௫ லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி.
தமிழகத்தில், 1967 வரை ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அக்கட்சி எதற்காகவும் கடன் வாங்கி ஆட்சி நடத்தவில்லை; அரசின் வருவாயை வைத்தே நிர்வாகத்தை நடத்தி வந்தது.
ஆனால், கழகங்கள் எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதிருந்து கடந்த 55 ஆண்டுகளாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இலவசங்களை கொடுத்து ஓட்டுகளை கவர, மாறி மாறி வாங்கிய கடன் தான், 8 லட்சம் கோடி ரூபாய்!
ஒரு சாதாரண விவசாயி கூட, திருப்பி கொடுக்கும் சக்தி இருந்தால் மட்டும் தான் கடன் வாங்குவார். ஆனால், அரசியல்வாதிகளோ, 'நாமா திருப்பி கொடுக்க போகிறோம்' என்ற அலட்சியத்தில் கடன் மீது கடன் வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
மக்கள் ஆரம்ப காலத்திலேயே இலவசங்களுக்கு மயங்காமல் புறக்கணித்து இருந்தால், தமிழகத்திற்கு இவ்வளவு கடன் சுமை ஏறி இருக்காது.
இலவசங்களுக்காக ஆட்சியாளர்கள் வாங்கும் கடன், மக்களாகிய தங்கள் தலையில் தான் விடியும் என்று கொஞ்சம் பகுத்தறிவுடன் யோசித்திருந்தாலே, கடன் ஏற்பட்டிருக்காது.
ஆனால், 'பகுத்தறிவா... அது எந்த கடையில் விற்பனை ஆகிறது?' என்று கேட்கும் நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாய் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
lll
நியாயமான விசாரணை நடக்குமா? கோ.பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான
கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது, பார் உரிமம்
வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட புகார்களில், 1,--000 கோடி ரூபாய் அளவுக்கு
ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநில லஞ்ச
ஒழிப்புத்துறை பதிவு செய்த பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்
துறை சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல்
செய்த மேல்முறையிட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இம்மாதம்,
14ந் தேதி நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
'தமிழக அரசு தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,
அமலாக்கத் துறை திடீரென நுழைந்து விசாரிக்க என்ன காரணம்? மாநில அரசின்
விசாரணை அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கலாமா?' என்று கேள்வி
எழுப்பியுள்ளனர்.
இதே உச்ச நீதிமன்றம் கரூர் த.வெ.க., பிரசார
கூட்ட நெரிசலில் ஏற்பட்ட இறப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசு நியமித்த
ஒரு நபர் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றம் நியமனம் செய்த சிறப்பு புலனாய்வு
குழுவை ஏற்காமல், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது.
அத்துடன்,
தமிழக காவல் துறையை நம்பாமல், தமிழகத்தை சாராத இரு காவல் துறை உயர்
அதிகாரிகள், இந்த விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
அதேநேரம், டாஸ்மாக் வழக்கில், 'மாநில அரசின் விசாரணை அதிகாரத்தை பறிக்கலாமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக ஊழல் தடுப்பு போலீசாரையும் உத்தமர்களாக உச்ச நீதிமன்றம் நினைத்துவிட்டது போலும்!
டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து பதியப்பட்ட வழக்குகளில், ஊழல் தடுப்பு
போலீசார் சரியான புலன் விசாரணை மேற்கொள்ளாததால் தான், அதில் உள்ள
குளறுபடிகளை அமலாக்கத் துறை ஆராய்ந்து, டாஸ்மாக்கில், 1,000 கோடி
ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைத்துள்ளது.
அதே போல் கடந்த 2021க்கு பின், தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்
மீது, ஊழல் தடுப்பு போலீசார் சரியான நடவடிக்கை எடுக்காததால் தான், உயர்
நீதிமன்றம் மீண்டும் மறுஆய்வு செய்து விசாரித்து வருகிறது.
தமிழக
அரசின் ஏஜென்சியான டாஸ்மாக் நிர்வாகம் செய்துள்ள முறைகேடுகளை, தமிழக
அரசின் மற்றொரு ஏஜென்சியான ஊழல் தடுப்பு போலீசார், எப்படி நியாயமாக
விசாரிப்பர்?
அமைச்சர்கள் மீதான வழக்கில், ஊழல் தடுப்பு
போலீசாரின் கடந்த கால விசாரணையே இதற்கு சான்று. மாநில அரசின் விசாரணை
அதிகாரத்தை அமலாக்கத் துறை பறிக்க முயற்சிக்கலாமா என்ற நீதிபதிகளின்
கேள்வியால், டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளில் சுணக்கத்தை
ஏற்படுத்தலாம்.
இதனால், மக்கள் பணத் தை கொள்ளை அடிக்கும் ஊழல் பெருச்சாளி களுக்கு, மேலும் கொள் ளை அடிக்கும் எண்ணமே மேலோங்கும்!
lll

