PUBLISHED ON : மார் 22, 2026 02:37 AM

எம்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் சட்டசபை தேர்தல் முதலிடத்தையும், முதல்வர் இருக்கையையும் ஸ்டாலினுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்கள் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் திருவிழாவாக இருக்கப்போகிறது' என்று ஆரூடம் கூறியுள்ளார், தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ்.
சோற்றுக்கு போடும் உப்பிலிருந்து, மின்சார கட்டணங்கள் வரை எதையும் விட்டு வைக்காமல் விலைகளையும், கட்டணங்களையும் உயர்த்தி, மக்களை கசக்கி பிழிந்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க., அரசு, மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் உலா வந்து கொண்டிருக்கிறது.
உரிமைத் தொகை, கோடைக்கால சிறப்பு தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், 5,000 ரூபாய் ரொக்கம் என, தாங்கள் கொடுத்த பணம் தங்களை கரைசேர்த்து விடும் என்று பகல் கனவு காண்கிறது.
கூடவே, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்துத் திணிப்பை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு மக்களை மூளைச்சலவை செய்கிறது.
இதுவரை தேர்தல் காலங்களில் வெளியான எந்த கருத்துக் கணிப்பும், 50 சதவீதம் கூட உண்மையாக இருந்ததில்லை.
கிண்டியில் குதிரைப் பந்தயம் நடக்கும் நாட்களில், பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகளில் எந்த குதிரை வெற்றி பெறும் என்று ஆருடம் கூற சிலர் அமர்ந்திருப்பர்.
அவர்களது ஆருடம் தோற்றுப்போனால், அவர்களது கணிப்பு ஏன் தோற்றது என்று அதற்கும் ஒரு கதை சொல்லுவர்.
அதுபோன்ற ஜோதிடர் தான், மருது அழகுராஜ்; கடந்த காலங்களில் அ.தி.மு.க.,விடம் பெற்ற ஊதியத்திற்கு ஆருடம் பார்த்துக் கொண்டிருந்தார்; இப்போது, தி.மு.க.,விடம் பெற்ற பணத்திற்கு ஜோதிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பெண்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அவர்களை படைத்த பிரம்மனாலேயே கண்டுபிடிக்க முடியாது. இதில், அவர்கள் மனதில் என்ன திட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது எல்லாம் மலையைக் கிள்ளி எலியை பிடிப்பது போன்றது!
இந்நிலையில், அவர்களுக்கு கொடுத்த உரிமை தொகையை நம்பி, கலர் கலராக கனவு காண்கிறது, தி.மு.க., அரசு.
தேர்தல் முடிவின் போது தான் தெரியும்... அவர்கள் ஸ்டாலினுக்கு முதல்வர் இருக்கையை ஒதுக்கி வைக்கப் போகின்றனரா அல்லது திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாக ஆகப் போகின்றனரா என்பது!
lll
கூட்டணியே எதிர்காலத்திற்கு நல்லது! கோ.திருநாவுக்கரசு, சென் னையில்
இருந்து அனுப்பிய , 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வினருடைய ஊழல் அராஜகத்தை
எதிர்த்து கட்சி ஆரம்பித்துள்ளதாக கூறும் தமிழக வெற்றிக் கழக தலைவர்
நடிகர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில், த.வெ.க.,விற்கும்,
தி.மு.க.,விற்கும் தான் போட்டி என்கிறார்.
அவர் கூற்றுபடி,
த.வெ.க., - தி.மு.க.,விற்கான போட்டியில், தி.மு.க., வெற்றி பெற்றால்,
அதன்பின், விஜயின் நிலைமை பெரும் திண்டாட்டமாகி விடும்!
உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு, விஜய் இடையூறாக இருப்பதை, ஸ்டாலின்
குரூப்பால் ஏற்க முடியாது. விஜய் மீண்டும் எழுந்து விட முடியாத அளவு
எல்லாவகையில் நசுக்க எண்ணுவர்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள்
மீது பொய் வழக்குகள் பாயும்; சட்டசபை தேர்தலில் எவரெல்லாம் அதிக ஓட்டுகள்
வாங்கினரோ, அவர்களை விலைக்கு வாங்குவர். விஜய் மீதும் ஏதாவது வழக்குகளை
போட்டு, அவரை நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வைப்பர்.
தற்போது,
அவர் மனைவி தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கிற்கு காரணமான நடிகையின்
தொடர்பை வைத்து, எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்து,
அரசியலில் மட்டுமல்ல... இந்த நாட்டை விட்டே துண்டை காணோம், துணியை காணோம்
என்று ஓடக்கூட செய்து விடுவர்.
நடிகர் விஜயகாந்தை என்ன பாடுபடுத்தினர் என்பதை நாடே அறியும்.
இவற்றை எல்லாம் தவிர்க்க, அரசியலில் ஆழமாக கால் ஊன்ற வேண்டுமென்றால், விஜய் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் விஜய் தனித்து நின்றால், ஓட்டுகளை தான் பிரிக்க முடியுமே தவிர, வெற்றி பெற முடியாது.
அதேநேரம், அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தால், 100 சதவீதம் வெற்றி நிச்சயம்.
அரசியலில் சில புரிதல்கள், தெளிவு பெறவும், கட்சிக்கான கட்டமைப்புகளை
ஏற்படுத்தும் வரையாவது, பா.ஜ., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகளுடன்
விஜய் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு
நல்லது! lll
தமிழகத்தை கவனியுங்கள்! கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும்
வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர், நம் நாட்டிற்கும் சில பாதிப்புகளை
ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை தான் என்றாலும், அதிலும் கூட காங்கிரஸ்,
தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் அரசியல் லாபம் காணத்
துடிக்கின்றன.
நம்மிடம் போதிய அளவு பெட்ரோல், டீசல் மற்றும்
எரிவாயு சிலிண்டர் கையிருப்பு உள்ளன என்று பெட்ரோலிய துறை அமைச்சர், அதி
காரிகள் மற்றும் சிலிண்டர் விற்பனையாளர் சம்மேளனம் தெரிவித்தும், அதைக்
கண்டுகொள்ளாமல், பார்லிமென்டை முடக்குவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்று
அரசியல் அவியல் செய்து கொண்டிருக்கின்றனர், 'இண்டி' கூட்டணியினர்.
இதன் வாயிலாக மக்களிடம் பீதியை ஏற்படுத்தி, மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது தான் இவர்களது நோக்கம்!
அதிலும் தி.மு.க.,வினர் இதை வைத்து தேர்தல் அரசியல் செய்ய ஆரம்பித்து
விட்டனர். அவர்களின் மூக்கை உடைப்பது போல், பிரதமர் மோடி ஈரான் அதிபரிடம்
பேசியதன் விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு, கச்சா எண்ணெயை ஏற்றி
வந்த நம் கப்பல் மும்பை துறைமுகம் வந்து விட்டது.
எனவே, பெட்ரோல்,
சமையல் எரிவாயு பிரச்னைகளை பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெய்சங்கரும் கவனித்துக் கொள்வர். திராவிட மாடல் முதல்வரும், அவரது கூட்டணி
கட்சியினரும் அரசியல் அவியல் செய்வதை நிறுத்தி, கொலை, கொள்ளை,
கற்பழிப்பு, போதை கலாசாரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மீது
கவனத்தை செலுத்துவது நல்லது! lll
