sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மத்திய அரசு செய்யுமா?

/

மத்திய அரசு செய்யுமா?

மத்திய அரசு செய்யுமா?

மத்திய அரசு செய்யுமா?

5


PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ரகுநந்தன், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு --காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 370 அமலில் இருந்தபோது, பாதுகாப்பு பணிக்காக நின்றிருக்கும் ராணுவத்தினர் மீது, மாணவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி, கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இதற்காக, அவர்களுக்கு பாகிஸ்தானிடம் இருந்து சன்மானம் வழங்கப்பட்டு வந்தது.

ஜம்மு - -காஷ்மீரில் மாணவர்கள் செய்து கொண்டிருந்த அக்காரியத்தை தான், தற்போது, இரட்டை குடியுரிமை பெற்றவரும், காங்., கட்சி தலைவருமான ராகுல், வெளிநாடுகளிலும், பார்லிமென்டிலும் செய்து வருகிறார்.

அதற்காக, அவர் எந்தெந்த வழிகளில், 'சன்மானம்' பெறுகிறாரோ!

பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, 'ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து, பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டும்' என, கடந்த 10 ஆண்டுகளாக கத்திக் கொண்டுருக்கிறார்.

ஏனோ தெரியவில்லை... ஆளும் பா.ஜ., தலைமை, சுப்ரமணிய சுவாமியின் கதறலை கண்டு கொள்ளவே இல்லை.

இப்போது, டில்லி உயர் நீதிமன்றம், 'மத்திய உள்துறை அமைச்சகம், ராகுலின் குடியுரிமை குறித்து, நடவடிக்கை எடுக்கலாம்' என்று பச்சைக் கொடி காட்டி விட்டது.

இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடி யாக, ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து, அவரது எம்.பி.,பதவியை பறித்து, இங்கிலாந்துக்கே அனுப்பி விட வேண்டும்.

அரசின் இந்நடவடிக்கைக்கு யாராவது குந்தகம் விளைவிக்க முயன்றால், அவர்களையும், ராகுலுடன் சேர்த்து வழியனுப்ப வேண்டும்.

இதை மத்திய அரசு செய்யுமா?

lll

பழனிசாமி சிந்திக்க வேண்டும்!


ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர், கட்சி பொதுச்செயலரான பழனிசாமியிடம் முறையிட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...

ஜெயலலிதாவின் உறவினர்கள் யாரையும், அவருடன் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டதுடன், தனி ஆளாக இருந்த அவரை, ஊழலில் சிக்க வைத்து, சிறைக்கு அனுப்பியவர் தானே சசிகலா?

தன் உறவினரான சுதாகரனை, தத்தெடுக்க வைத்து, அவர் திருமணத்திற்கு, 100 கோடி ரூபாய் செலவு செய்ய வைத்த இவர், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை அளிக்காமல், ஏனோ தானோவென்று இருந்து, அவர் மரணத்திற்கு காரணமாக இருந்தார்.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில், உடல் மீது அட்சதையை போட்ட பின், தான் அணிந்திருந்த பட்டுப்புடவை பாழாகி விடுமே என்று கையை அதில் துடைக்காமல், புரோகிதர் வேட்டியில் துடைத்தவர் தானே இவர்!

இப்பேர்ப்பட்ட சசிகலாவை கட்சியில் சேர்த்தால், எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகள் நிச்சயமாக, அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நல்லவேளை... 'நீக்கப்பட்ட அவர்களை இனி எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன்' என, திட்டவட்டமாக கூறிவிட்டார், பழனிசாமி.

அதேநேரம், தற்போது இருக்கும் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., காலத்தில் இருந்த கட்சி அல்ல; தனித்து நின்று ஜெயிப்பதற்கு!

தேவை இல்லாமல், பா.ஜ.,வை பகைத்து, கூட்டணியில் இருந்து வெளியேறியதால், லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட, அ.தி.மு.க.,வால் வெற்றிபெற முடியவில்லை.

'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் துாக்கி செயல்' என்கிறார் வள்ளுவர். இதை பழனிசாமி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க., மூன்றாக உடைந்து, அதன் ஓட்டுகளும் மூன்றாக பிரிந்து விட்ட நிலையில், வலுவான கூட்டணியும் இல்லை.

இந்நிலையில், பழனிசாமி தன் வலிமை என்ன, மாற்றார் வலிமை என்ன என்று சிந்தித்து, சீர்துாக்கிப் பார்த்து, 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால் தான், அ.தி.மு.க.,வின் எதிர்காலம் நல்ல முறையில் அமையும்.

இல்லையென்றால், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை'யாகி விடும்!

lll

குறை சொல்வதாக அர்த்தமா?


என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழ் - இது உங்கள்இடம் பகுதியில் வெளியாகும் கடிதங்கள், தி.மு.க.,வை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. மற்ற கட்சிகளை இதமாக விமர்சனம் செய்வதாகபுலம்புகின்றனர், தி.மு.க.,வினர்.

அதற்கு காரணம் யார்?

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 'மதுவால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாகி விட்டதாகவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்' என, மக்களுக்கு வாக்கு கொடுத்தார், எம்.பி., கனிமொழி.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய தமிழக முதல்வருமான ஸ்டாலின், கருப்பு சட்டை அணிந்து, 'மதுவை ஒழிப்போம்' எனும் பதாகையோடு போராட்டம் நடத்தினார்.

மக்களும் நம்பி ஓட்டு போட்டனர். என்னவானது?

'ஸ்டாலின் தான் வர்றாரு; விடியல் தரப்போறாரு' என்ற பாட்டைக் கேட்டது தான் மிச்சம்; மக்களுக்கு விடியல் இல்லாமல் போனது. முன்பை விட மது விற்பனை அதிகரித்ததே தவிர, ஒரு மாற்றமும் இல்லை; ஏமாற்றம் தான்!

அது மட்டுமா... பழைய ஓய்வூதிய திட்டம், 'நீட்' ஒழிப்பு என, சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசினர். எதையாவது செய்ய முடிந்ததா?

மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு உதவித் தொகை, மகளிர் இலவச பேருந்து என்று இலவச திட்டங்களை கொடுத்து விட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு முதல், இரு மடங்கு மின் கட்டண உயர்வு, பல மடங்கு வீட்டு வரி உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு என்று எல்லாவற்றையும் உயர்த்தி விட்டு, 'நாங்கள் நல்லாட்சி தருகிறோம்' என்றால், கேட்பவர்கள் கேணையர்களா?

தங்கள் ஆதங்கத்தை கொட்ட மாட்டார்களா; அரசை கேள்வி கேட்க மாட்டார்களா?

அது, அரசை குறை சொல்வது என்று அர்த்தம் ஆகுமா?

உடன்பிறப்புகளே... நியாயமாக சிந்தியுங்கள்!

lll






      Dinamalar
      Follow us