தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ 'மிக்சர்' தின்று கொண்டிருந்தால் கட்சி வளருமா?

 'மிக்சர்' தின்று கொண்டிருந்தால் கட்சி வளருமா?

 'மிக்சர்' தின்று கொண்டிருந்தால் கட்சி வளருமா?


PUBLISHED ON : ஜன 28, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2026 02:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1962 வரை சுதந்திரம், ஓட்டுரிமை வாங்கி கொடுத்தோம் என்று பிரசாரம் செய்து, மக்களிடம் கட்சியை கொண்டு சேர்த்த னர், அன்றைய காங்கிரஸ் பிரமுகர்கள்.

பின், 1965ல் ஹிந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் நடந்த போது, அதில் தி.மு.க., பங்கேற்கவில்லை. ஆனாலும், 1967 சட்டசபை தேர்தலின் போது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை, தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

இந்த சாதுர்யம், அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை.

அன்று, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு, மாணவர்களுக்கு ஆறுதலான உறுதி மொழிகளை அளித்திருந்தால், தமிழகத்தின் அரசியல் களமே மாறியிருக்கும்.

அதை செய்யாமல் விட்டதால், உள்ளூர் காங்., தலைவர்களின் முக்கியத்துவம் குறைந்து போனது.

அதன்பின், 1971 பார்லிமென்ட் தேர்தலில், இந்திரா காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி, 10 தொகுதிகளில் தான் ஜெயித்தது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை'யாக, அன்றிலிருந்து இன்றுவரை, கட்சியை பலப்படுத்துவதற்கு பதில், மாநில கட்சிக் கு பல்லக்கு துாக்கி பலனடையவே நினைக்கிறது, தமிழக காங்.,

இந்த லட்சணத்தில், கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் டில்லி தலைமையிடம் குவிந்துள்ளதாக குறைபட்டுக் கொள்கிறது, தமிழக காங்.,

கடந்த 1990களில் நேரு குடும்பத்தை சாராதவர்கள் கையில் தான் கட்சியும், ஆட்சியும் இருந்தது. அப்போதே கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கலாமே!

கடந்த 2004 -- 2014, மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலாவது, காங்கிரஸ் கட்சியை வளர்க்க முனைப்பு காட்டியிருக்கலாம். குறைந்தபட்சம், 2024 பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற காங்., - எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளிலாவது, கட்சியை பலப்படுத்தி இருக்கலாம்; எதுவுமே செய்யவில்லை.

இப்படி கட்சியை வளர்க்க எந்த முன்னெடுப்பும் செய்யாமல், 'மிக்சர்' தின்பதையே முழுநேர வேலையாக பார்த்து விட்டு, இப்போது, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியில் பங்கு கிடைக்குமே என்று நாக்கை சப்புக் கொட்டுகின்றனர், தமிழக காங்கிரசார்.

முறையான கட்டமைப்பையும், மக்கள் தொடர்பும் உள்ள உள்ளூர் தலைவர்களை உருவாக்கி இருந்தால், இன்று எந்த கட்சியிடமும் தொகுதி கேட்டு தொங்க வேண்டியதில்லை; பங்கீடு செய்யும் இடத்தில் காங்கிரஸ் இருந்திருக்கும்!

என்ன செய்ய... 'மனுநீதி சோழன் ஆட்சி நடக்கிறது...' என்று ஆளுங்கட்சியை துதிபாடி, அதன் வாயிலாக பலனடைய துடிப்பவர்கள் தானே காங்., தலைவர்களாக இருக்கின்றனர். பின் எப்படி கட்சி வளரும்?

சிந்தனையற்ற கார்கே! எ




என்.கந்தையா, விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: ' ஓட்டுகளைப் ெபறுவதற் காகவே, இளவயதில், தான் தேநீர் விற்றதாக கூறி வருகிறார், பிரதமர் மோடி. அவர், எப்போதாவது தேநீர் போட்டுள்ளாரா? இது, எல்லாம் நாடகம்! நேரு கொண்டு வந்த பெரிய திட்டங்களைப் போல் மோடி செய்த ஒரு பணியை சொல்லுங்கள்' என்று கேட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

நேரு கொண்டு வந்த மிகப் பெரிய திட்டங்களும், அதன் விளைவுகளும் என்ன தெரியுமா...

l கடந்த 1948ல் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுத்த போது, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா., சபைக்கு எடுத்துச் சென்று, அதை சிக்கலாக்கினார், நேரு

l ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து, தேசிய நீரோட்டத்தில் அம்மாநிலத்தை கலக்க விடாமல் தடுத்து, பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிய பெரும் சாதனையாளர் இவர்

*சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில், தன் தாராள மனதை காட்டி, இந்தியாவின் வளமான எதிர்காலத்தை காவு கொடுத்தவர், நேரு

*கடந்த 1950ல் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டும் என அமெரிக்காவும், சோவியத் யூனியனும் விருப்பம் தெரிவித்த போது, சீனாவிற்கு பரிந்துரை செய்து, இந்தியா இடம் பெறுவதை தடுத்தவர்

*கடந்த 1954ல் இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள் எனும் விதமாக, 'இந்தி சீனி பாய் பாய்' என்று சீனாவிற்கு வெள்ளை கொடி காட்டியதை, தன் ராஜதந்திரமாக பறைசாற்றி, நம் நாட்டில் ஒரு வலுவான ராணுவ கட்டமைப்பை உருவாக்காமல், 1962ல் சீனாவுடனான போரில் நம் நாடு மோசமான தோல்வியை சந்திக்கவும், லடாக்கின் வடமேற்கில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீனாவிடம் இழக்கவும் காரணமாக இருந்தவர் நேரு.

இவை எல்லாம் நாட்டின் பாதுகாப்பிற்காக அவர் கொண்டு வந்த மிகப்பெரிய திட்டத்தின் காரணமாக விளைந்த, 'நன்மைகள்!'

இதுதான் இப்படி என்றால், 'நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும்' என்று தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாட்டா எச்சரித்ததை கண்டுகொள்ளாமல், பின்னாளில் பல பொதுத்துறை நிறுவனங்கள் நிதி இழப்பை சந்தித்து மூடுவிழா காண காரணமாக இருந்தவர் நேரு.

ஆனால், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கி, பிரதமரின் வேலைவாய்ப்பு திட் டத்தின் கீழ், இன்று சிறு - குறு தொழில் துறையில் நாட்டிலேயே முதல் இடத்தில் ஜம்மு - காஷ்மீரை நிலை நிறுத்தி யுள்ளவர், மோடி.

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை தடுத்து நிறுத்தி, இந்தியா பலன் பெற அணைகளை கட்டி வருவது மோடி அரசு.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் காங்கிரஸ் இருந்தும், சரியான சாலை வசதி இல்லை. குடிநீருக்காக பெண்கள் பல மைல் துாரம் குடங்களுடன் அலைந்தனர்; முறையான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டனர்.

ஆனால், மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில், வீடுதோறும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன; குழாய்களில் தண்ணீர் வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலைகள் பளபளக்கின்றன; பலமான ராணுவ கட்டமைப்பை உருவாக்கியுள்ளார், மோடி .

'பாம்பாட்டிகளின் நாடு' என்று வர்ணிக்கப்பட்ட நம் நாட்டை, உலகின் நான்காவது பொருளாதார நாடாக உயர்த்தியுள்ளார்.

ஆனால், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்கிறார்... நேருவை போல் மோடி செய்த நன்மை என்னவென்று!

வரலாற்றின் தராசில் நியாயமான எடைக்கல்லை வைத்து துாக்கிப் பாருங்கள்... மோடி செய்த நன்மைகள் என்னவென்று தெரியும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us