தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ வாய்ப்பை தக்க வைக்குமா விஜய் சர்க்கார்?

 வாய்ப்பை தக்க வைக்குமா விஜய் சர்க்கார்?

 வாய்ப்பை தக்க வைக்குமா விஜய் சர்க்கார்?


PUBLISHED ON : மே 07, 2026 12:45 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2026 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.ராதாசந்த், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திரத்திற்கு பின் தமிழக அரசியலில், 1967ல் தி.மு.க., ஏற்படுத்திய ஆச்சரியத்தை மிஞ்சும் வகையில், அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

இந்த வெற்றியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு வீட்டுக்கு ஒரு ஓட்டு என்றாலும், 25 சதவீத ஓட்டுகளும், 10 முதல் 15 சீட்டுகள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்திருப்பார். ஆனால், ஒரு வீட்டில், 2 - 3 ஓட்டுகள் வரை விழுந்து, 108 தொகுதிகளை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

தமிழகத்தை ஆள்வதற்கான வாய்ப்பை மக்கள் விஜய்க்கு கொடுத்துள்ளனர்; அவர் எப்படி இந்த ஆட்சியை நடத்தி, மேலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கப் போகிறார் என்பது தான், மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

காரணம், அவர் இதுவரை சந்தித்த பிரச்னைகள் ஒன்றுமில்லை எனும் அளவில், இனிமேல் தான் அவருக்கு முள்படுக்கையே அமைய போகிறது.

அனுபவம் வாய்ந்த இரண்டு எதிர்க்கட்சிகளையும் அவர் சமாளிக்க வேண்டும்; தான் அறிவித்த இலவச திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; அதற்கான நிதி ஆதாரத்தை எப்படி உருவாக்க போகிறார் என்பதும் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

கூடவே, இரு கழகங்களின் ஆட்சியில், ஊழல் பெருச்சாளிகளாக மாறிவிட்ட அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., லாபிகளை உடைத்து, அவர்களை தன் சொல்லை கேட்க வைக்க வேண்டும். அதுபோக, மாவட்டந்தோறும் உள்ளூர் பிரச்னைகள், ஜாதி கலவரங்கள், ஆணவ படுகொலைகள், போதை பொருட்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, சாலை மற்றும் விமான நிலைய நில எடுப்பு, 'சிப்காட்' நில எடுப்பு பிரச்னைகள் என, தினமும் எதிர்க்கட்சிகள் குடைச்சல் கொடுத்தபடியே இருப்பர்.

அதை, சாமர்த்தியமாக கையாள வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக சட்டசபையை திறம்பட நடத்தி செல்வதுடன், பத்திரிகைகள் வாயிலாக மக்கள் சந்திப்பு நிகழ்த்தி, ஊடகத்தினரின் கேள்வி களுக்கு நிதானமான பதில் சொல்லி பழக வேண்டும்.

இல்லையென்றால், அதையே எதிர்க்கட்சிகள் பெரிய விஷயமாக்கி, அரசியல், 'அவியல்' செய்யும் விதமாக தினமும் போராட்டங்களை அறிவித்துவிட்டால், தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகி விடும்.

இவற்றை எல்லாம் சமாளித்து, மக்கள் கொடுத்துள்ள வாய்ப்பை விஜய் சர்க்கார், எப்படி திறம்பட கையாளப் போகிறது என் பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்! வெ.நாராயணன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில், மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறுமி பொற்றாமரைக்குளம் அருகே சினிமா பாடலுக்கு நடனமாடி, 'ரீல்ஸ்' எடுத்து வெளியிட்டது, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதுடன், கோவிலின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, பலத்த சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படியிருக்கையில், அச்சிறுமி மொபைல் போனை கோவிலுக்குள் எடுத்துச் சென்றுள்ளாள் என்றால், இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் காவல் துறைய ி னரின் சோதனையின் லட்சணத்தை!

ஏற்கனவே, கோவிலுக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இதுபோன்ற அலட்சிய மனோபாவம் கோவிலின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வைக்கிறது.

சமூக வலைதளங்களில், 'லைக்'குகளை பெற வேண்டும் என்பதற்காக, இன்றைய தலைமுறையினர் எதையும் செய்ய லாம் என்ற மனப்போக்கில் இருக்கின்றனர். ​

கோவில் என்பது கடவுளைத் தொழும் இடம்; அது படப்பிடிப்பு நடத்தும் ஸ்டூடியோ அல்ல. 16 வயது சிறுமி என்பதால், அவள் அறியாமல் இதை செய்திருந்தாலும், அதைத் தடுக்க வேண்டிய இடத்தில் இருந்த காவல் துறை மற்றும் கோவில் நிர்வாகத்தை தட்டிக்கேட்க வேண்டியது பக்தர்களின் கடமை!

இனிமேலாவது இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருக்க, சோதனைகளைத் தீவிரப்படுத்துவதோடு, பணியில் மெத்தனமாக இருந்தவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவி லின் புனிதமும், பாதுகாப்பு விதிகளும் காகிதத்தில் இருந்தால் மட்டும் போதாது; அவை களத்தில் சரியாக அமல்படுத்தப்பட வேண்டும்!

நோட்டாவுக்கு ஓட்டு இல்லை


! ம.பிரபு, கல்லல், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எவருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாதவர்களும் தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற, 2 013ல் 'நோட்டா' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நோட்டாவுக்கு ஓட்டு போட்டு வந்தனர்.

ஓர் உணவகத்திற்கு உணவு சாப்பிட செல்லும் ஒருவர், அங்குள்ள உணவு வகைகளில், ஏதாவது ஒன்றை தேர்ந்தெ டுத்து உண்டால்தான் பசி அடங்குமே தவிர, எதுவுமே பிடிக்கவில்லை என்றால், பசியுடன் தான் இருக்க வேண்டும். அதைப் போன்றது தான் நோட்டாவுக்கு ஓட்டளிப் பதும்!

அவ்வகையில், 2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பதிவான, 'நோட்டா' ஓட்டு, 1.43 சதவீதமாக இருந்தது. அதுவே, 2021ல் தமிழக சட்டசபை தேர்தலில், 0.75 சதவீதமாக குறைந்தது. தற்போது அந்த எண்ணிக்கை, 0.41 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது வரவேற்கத்தக்க செயல்.

இதுவே, வருங்காலத்தில் நோட்டாவுக்கு எவருமே ஓட்டளிக்க விரும்பவில்லை என்ற நிலை வர வேண்டும்; அப்போது தான், ஜனநாயகம் மீட்கப்படும்!

தி.மு.க., தேய்வதை தடுக்க முடியாது!


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆண்டு வந்த இரு திராவிட கட்சிகளின் ஆட்சி, இன்று முடிவுக்கு வந்துவிட்டது.

விலைவாசி உயர்வு, வரி உயர்வு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாரிசு ஆட்சி, சிலை நிறுவுதல், பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற ஆடம்பர செலவுகள், தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன.

கட்சியின் மூத்த உறுப்பினர்களை புறந்தள்ளி மகன், மாப்பிள்ளை, பேரன் என, மன்னராட்சி போன்று குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள், தி.மு.க.,வை ஓய்வு எடுக்க வைத்து விட்டது என்றே கூறலாம்.

இத்தகைய போக்கை இனியும் தி.மு.க., தலைமை மாற்றிக்கொள்ளாவிட்டால், தி.மு.க., தேய்வதை எவராலும் தடுக்க முடியாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us