PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: '--------------------------------உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், ஆண் - பெண் போன்ற பாகுபாடுகளை முழுமையாக நீக்க, மனதளவில் மக்கள் மாற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வைக்கம் நுாற்றாண்டு நினைவு நிறைவு விழாவில் பேசியுள்ளார்.
இதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
சமீபத்தில், சட்டசபையில் மூன்றாவது இட இருக்கையில் இருந்த மூத்த அமைச்சர்நேருவை, நான்காவது இடத்திற்கு மாற்றி, மூன்றாம் இடத்தில் தன் வாரிசை முன்னேற்றியது தான், பாகுபாடற்ற சமத்துவ நீதியா?
'உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி பிரிவுகளை அகற்ற வேண்டும்' என, அறைகூவல்விடுக்கும் முதல்வர், தேர்தல்களில் ஜாதி பின்புலம் உள்ள வேட்பாளர்களாக தேடிப் பார்த்து, தொகுதிகளில் நிறுத்துவதற்கு பெயர் தான் ஜாதி பாகுபாடுகளை நீக்குவதா?
'ஆண் - பெண் பேதங்கள் அகல வேண்டும்' எனும் முதல்வர், இதை, தன்கட்சியில் செயல்படுத்தியுள்ளாரா... வேட்பாளர் மற்றும் பதவிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து,ஆண் - பெண் சமத்துவத்திற்கு வழி தான் செய்துள்ளாரா?
நேற்று வரை சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த தன் மகனை அழைத்து வந்து, அமைச்சர் ஆக்கி, இன்று துணை முதல்வராக்கியும் அழகு பார்த்துள்ள முதல்வர், பெண்ணான அவரது சகோதரிகனிமொழிக்கு கட்சியில் என்ன முக்கியத்துவம் கொடுத்துள்ளார்?
'ஏழை - பணக்காரன் பாகுபாடு மாற வேண்டும்' என, மார் தட்டும் முதல்வர், தேர்தலின்போது, வேட்பாளர் தேர்வு நேர்காணல்களில், 'எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என, 'நோட்டு'க்கு முக்கியத்துவம் தந்து, பசையுள்ள ஆட்களை, வலை வீசி பிடிப்பது ஏன்?
பரம ஏழையான கட்சித் தொண்டனுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்து, நிதிக்கு ஆலாய் பறப்பது ஏன்?
'பேசிப் பேசியே வளர்ந்த கட்சி தி.மு.க.,' என, அவ்வப்போது பெருமையாககூறுகிறார், ஸ்டாலின்.
பேசிப் பேசி கட்சியை வளர்க்கலாம்; ஆனால், இப்படி பேச்சுக்கும், செயலுக்கும்சம்பந்தம் இல்லாமல் கட்சியை வளர்க்க நினைத்தால், தோற்றுப் போவது நிச்சயம்!
தி.மு.க.,வின் குருகுல கல்வி!
ரா.
கணேசன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு,
2023, செப்.,17 அன்று விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து,
திராவிட மாடல் ஆட்சியின்அக்கப்போர் ஆரம்பித்து விட்டது.
'குலக்கல்வி'யை
ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, மாநிலத்திற்குள்
எட்டிப்பார்க்க விட மாட்டோம் என, வீர உரை நிகழ்த்தி வந்த ஆட்சி யாளர்கள்,
'உங்கப்பனும்,எங்கப்பனும் மண்ணுக்குள்ள... நான் மட்டும் சொம்புக்குள்ள'
என்பது போல், திட்டம் அறிமுகமாகி, 15 மாதங்களுக்குப் பின்,தற்போது, 'கலைஞர்
கைவினை' திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.
சரி... விஸ்வகர்மா திட்டத்திற்கும், 'கலைஞர் கைவினை' திட்டத்திற்கும்அப்படியென்ன வித்தியாசம் என்று பார்ப்போம்...
மத்திய
அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தில், தச்சு, காலணிதயாரித்தல், மீன்
வலை தயாரித்தல், நகை தயாரித்தல், படகு கட்டுமானம், மண்பாண்டம் செய்தல்
உட்பட, 18 வகைகைத்தொழில்கள் உள்ளன.
இதில் சேர, 18 வயது
நிறைவடைந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்...வயது வரம்பு இல்லை. எந்த வயது
என்றாலும், தொழில் செய்ய தெம்பு இருந்தால், திட்டத்தில் கடன் வாங்கி ஜாம்
ஜாம்னு தொழிலை நடத்தலாம்.
என்ன... முன்பே அந்த தொழிலில்
ஈடுபட்டிருக்க வேண்டும். கூடவே, இத்திட்டத்தில் சேருவோருக்கு, மூன்று
வாரத்திற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி காலத்தில், அவர்கள் தினசரி வருமானம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, 500 ரூபாயும் வழங்குகிறது, மத்திய அரசு.
-பயிற்சிக்குப்
பின், தொழிலுக்கான உபகரணங்கள்வாங்க, 15,000 ரூபாயும், பின், தொழில்
துவங்க, பிணை இல்லாத கடனாக, 5 சதவீத வட்டியில், ஒரு லட்சம் ரூபாய்
வழங்கப்படுகிறது. அதை திருப்பி செலுத்தியபின், 2 லட்சம் ரூபாய் கடன்
வழங்குகிறது.
ஆனால், கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற வேண்டும்
என்றால்,35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எத்தனைமாதம் பயிற்சி,
தினப்படிஉண்டா, உபகரணம் வாங்கபணம் தருவரா, திட்டத்திற்கான தமிழக அரசின்
நிதி ஒதுக்கீடு என்ன... இது பற்றி எல்லாம் ஒரு விளக்கமும் இல்லை.
திராவிட
மாடல் ஆட்சியாளர்களின், இந்த,'குலக்கல்வி' திட்டத்தில், விஸ்வகர்மா
திட்டத்தில்உள்ள, 18 தொழில்களோடு கூடுதலாக பூட்டு தயாரித்தல்,
இசைக்கருவிகள் தயாரித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள் உட்பட ஏழு தொழில்களை
சேர்த்துள்ளனர்அவ்வளவே!
இந்த தொழில்களையும்விஸ்வகர்மா திட்டத்தில்
சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சொன்னால்,அவர்கள் சேர்த்துவிடப்
போகின்றனர்... இதற்கு எதற்கு தனித்திட்டம்?
ஆக... இதிலும், திராவிடமாடல் அரசு, தன் ஸ்டிக்கர்ஒட்டும் வேலையை செவ்வனே செய்து முடித்துள்ளது!
அதுசரி... மத்திய அரசு கொண்டு வந்தால் குலக்கல்வி... தி.மு.க., அரசு கொண்டு வந்தால், குருகுலக் கல்வியா?
தியாகத்திற்கு மதிப்பில்லையே!
என்.மல்லிகை
மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தானுக்கு
எதிராக போர் புரிந்து, அதில் வெற்றி பெற்று, புதிதாக வங்கதேசம் என்ற
பெயரில்நாடு உருவாக காரணமாக இருந்தவர், முஜிபுர் ரஹ்மான்!
இவரது வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தவர்,மறைந்த முன்னாள் பிரதமர்இந்திரா காந்தி.
ஆனால்,
வங்கதேசம்உருவாகக் காரணமாக இருந்தமுஜிபுர் ரஹ்மானையே, அடித்து கொலை
செய்தவர்கள் தான், வங்க தேசத்தினர்.இப்போது, அவரது மகள் ஷேக் ஹசீனாவை,
நாட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர். அவர் இந்தியாவில்அடைக்கலமாகி
உள்ளார்.
அப்படியும், வன்முறை கும்பல்களின் வன்மம் குறைய வில்லை.
முஜிபுர்ரஹமான் சிலையை அடித்துநொறுக்கினர். தற்போது, ரூபாய் நோட்டில்
இருந்தும்அவரது படத்தை அகற்றுவதில் மும்முரமாக உள்ளது,வங்க தேச இடைக்கால
அரசு.
ரஷ்ய புரட்சிக்கு அடித்தளம் அமைத்த லெனினுக்கும், இதே நிலைதான் ஏற்பட்டது. அவரதுசிலையை உடைத்து எறிந்தனர், அந்நாட்டு கலககும்பல்!
இந்திய சுதந்திரத்திற்காகபோராட்டம் நடத்திய மகாத்மா காந்திக்கும், துப்பாக்கி குண்டு தான் பரிசாகத் தரப்பட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது, அரசியலில் தியாகத்திற்கு இடமில்லையோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.
மற்ற தலைவர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா விருதுவழங்கியவர்கள், மகாத்மாகாந்திக்கு மட்டும் பத்மஸ்ரீவிருது கூட வழங்கவில்லை.
ஒருவேளை, மகாத்மா காந்தி விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்என நினைத்து, நம் தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டனரோ என்னவோ!

