PUBLISHED ON : ஜூலை 07, 2024 12:00 AM

ஜூலை 7, 1981
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், பான்சிங் - தேவகி தேவி தம்பதியின் மகனாக, 1981ல் இதே நாளில் பிறந்தவர் மகேந்திரசிங் தோனி.
இவர், ராஞ்சி டி.ஏ.வி. ஜவஹர் வித்யா மந்திரில் படித்த போது, 'புட்பால் கோல் கீப்பராக' ஜொலித்தார். அவரின் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, இவரை கிரிக்கெட்டில் சேர்த்தார். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்த தோனி, கமாண்டோ கிரிக்கெட் கிளப்பில் விக்கெட் கீப்பராக பங்கேற்றார். பீஹாருக்காக விளையாடி வெற்றியை பெற்று தந்தார்.
இவரின் திறமையை பார்த்த பி.சி.சி.ஐ., 2004ல், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறக்கியது; அதிலும் ஜொலித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் புதிய சாதனை படைத்து, 3வது பேட்ஸ்மேன் ஆனார். 2005க்கு பின், அணியில் நிரந்தர வீரர் ஆனார். 2009ல், 'கேப்டன் கூல்' ஆகி அணியை உயர்த்தினார்.
தொடர்ந்து, 2007 டி- 20, 2011 உலக கோப்பை, 2013 சாம்பின்ஸ் டிராபி, 2010, 2016, 2018 ஆசிய கோப்பைகள், ஐ.பி.எல்.,லில், ஐந்து முறை சி.எஸ்.கே.,க்கு கோப்பையை பெற்று தந்த இவர், டெஸ்ட் மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து 2020ல் ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட், 'தல'க்கு இன்று 44வது பிறந்த தினம்!