PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

ஜூலை 17, 2005
குஜராத் மாநிலம், வதோதராவில், 1924, நவம்பர் 11ல் பிறந்தவர், இந்திர பிரசாத் கோர்தன்பாய் படேல் எனும் ஐ.ஜி.படேல்.
இவர், மும்பை பல்கலையில் பொருளாதார பட்டமும், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லுாரியில் முனைவர் பட்டமும் பெற்று, மும்பை பல்கலையில் பேராசிரியரானார். பின், சர்வதேச பொருளாதார நிதியத்தில் சேர்ந்தார். 1954ல், மத்திய நிதி அமைச்சரின் பொருளாதார ஆலோசகரானார்.
பின், ரிசர்வ் வங்கியின் 14வது கவர்னரானார். பதவி காலம் முடிந்ததும், ஆமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தின் இயக்குனரானார். தொடர்ந்து, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சின் இயக்குனரானார். இந்த பொறுப்பை வகித்த முதல் தெற்காசியர் என்ற பெருமை பெற்றார். இந்தியப் பொருளாதார தலைமை ஆலோசகராகப் பொறுப் பேற்று, பொருளாதார சிக்கல்களை சமாளித்தார். அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், இவரை நிதியமைச்சராக வற்புறுத்தியும் மறுத்து விட்டார். இவருக்கு, 'பத்ம விபூஷன்' விருது வழங்கப்பட்டது. இவர் 2005ல் தன் 81வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!