PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

நவம்பர் 3, 1928
புதுச்சேரியில், பாவேந்தர் பாரதிதாசன்-- பழநியம்மா தம்பதியின் மகனாக, 1928ல் இதே நாளில் பிறந்தவர் கோபதி என்ற மன்னர் மன்னன். சிறு வயதிலேயே, தன் தந்தையுடன் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
கடந்த 1947ல் அன்னிய ஆட்சி அகல வேண்டும்என்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரெஞ்ச் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், இந்தியாவுடன் புதுவை இணைய வேண்டும் என்று நடந்த போராட்டத்திலும் ஈடுபட்டார்.
பாரதிதாசன் போலவே தோற்றம், ஆற்றல், கொள்கையுடன் வாழ்ந்தவர். வானொலி நிலையத்தில்எழுத்தாளராக பணியாற்றிய இவர், 55 நுால்களை எழுதியுள்ளார்.
புதுவை தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய இவர், தனக்கு சொந்தமான பாவேந்தர் வாழ்ந்த வீட்டையும், அவரின் படைப்புகளையும் அரசுடைமையாக்க அளித்த இவர், 2020 ஜூலை 6ல், தன் 92வது வயதில் காலமானார்.
சமுதாய வளர்ச்சி, மகளிர் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட, மூத்த தமிழறிஞர் மன்னர் மன்னனின் பிறந்த தினம் இன்று!