PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

பிப்ரவரி 13, 2014
இலங்கையின் மட்டக்களப்பு அருகில் உள்ள அமிர்தகழி என்ற ஊரில், கல்லுாரி ஆசிரியர் பாலநாதனின் மகனாக, 1939 மே 20ல் பிறந்தவர் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.
லண்டனில் படித்த இவர், மஹாராஷ்டிரா மாநிலம் புனே திரைப்படக் கல்லுாரியில் ஒளிப்பதிவு கற்றார். பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை பார்த்து, 'தி வியூ பிரம் த போர்ட்' குறும்படத்தை இயக்கினார். அதை பார்த்த, மலையாள இயக்குனர் ராமு காரியத், தன், நெல்லு படத்துக்கு இவரை ஒளிப்பதிவாளராக்கினார்; அப்படம் கேரள அரசு விருது பெற்றது.
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். தமிழில், முள்ளும் மலரும் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரானார். கோகிலா கன்னட படம் வாயிலாக இயக்குனர் ஆனார். தமிழில் இவர் இயக்கிய, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள், பல்வேறு விருதுகளை பெற்றன.
பாலா, சீனுராமசாமி, ராம், வெற்றிமாறன், சுகா உள்ளிட்ட இயக்குனர்களை உருவாக்கிய இவர், 2014ல், இதே நாளில் தன் 75வது வயதில் காலமானார்.
கேமரா கவிஞரின் நினைவு தினம் இன்று!

