தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 10

இதே நாளில் அன்று: அக். 10

இதே நாளில் அன்று: அக். 10


PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 10: தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில், காசியப்பன் கிளாக் குடையார் – ராமாமிர்தம் தம்பதிக்கு மகளாக, 1937, மே 26ல் பிறந்தவர், கோபிசாந்தா எனும் மனோரமா.

ராமாமிர்தத்தின் தங்கையை காசியப்பன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால், கணவரை பிரிந்த ராமாமிர்தம், மகளுடன் காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்துாரில் குடியேறி, இருவரும் வீட்டு வேலைகள் செய்தனர்.

தன் 12வது வயதில், வைரம் நாடகக் குழுவில் இணைந்த கோபிசாந்தாவுக்கு, நாடகக் குழுவினர், மனோரமா என்ற பெயர் சூட்டினர். தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா உள்ளிட்டோரின் நாடகங்களில் நடித்தார். கண்ணதாசன் எழுதி, தயாரித்த மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, குணச்சித்திர வேடங்களிலும், தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன் உள்ளிட்டோருடன், நகைச்சுவை வேடங்களிலும் நடித்தார். முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி கதைகளிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர்., நடித்த படங்களிலும் நடித்தார். ‘வா வாத்தியாரே ஊட்டாண்ட, டில்லிக்கு ராஜான்னாலும்...’ உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 78வது வயதில், 2015ல் இதே நாளில் மறைந்தார்.

திரையுலக, ‘ஆச்சி’யின் நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us