PUBLISHED ON : அக் 11, 2026 12:00 AM

அக்டோபர் 11, 1942
உத்தர பிரதேச மாநிலம், அலஹாபாதில், பிரபல கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் – தேஜி பச்சன் தம்பதியின் மகனாக, 1942ல் இதே நாளில் பிறந்தவர், அமிதாப் பச்சன்.
அலஹாபாதில் பள்ளிக்கல்வி, நைனிடால் மற்றும் டில்லியில் கல்லுாரி படிப்பை முடித்தவர், கொல்கட்டாவில் கப்பல் கம்பெனியில் பணிபுரிந்தார். நடிப்பின் மீதான ஆர்வத்தால் மும்பை சென்றார்.
கடந்த 1969ல் வெளியான சாட் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் அறிமுகமாகி, சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து, புரட்சிகரமான கதை களத்தில் அமைந்த பல பாலிவுட் படங்களில் கோபக்கார இளைஞராக நடித்தார்.
தீவார், ஷோலே உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் புகழைத் தந்தன. அலஹாபாத் தொகுதியின் காங்., – எம்.பி.,யாகவும் இருந்தார். ‘உங்களில் யார் கோடீஸ்வரன்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரஜினியுடன் வேட்டையன், கமலுடன் கல்கி 2898 ஏ.டி., எஸ்.ஜே.சூர்யாவுடன் உயர்ந்த மனிதன் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்தார்.
‘பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ, தாதா சாகேப் பால்கே’ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள் ள இவருக்கு, இன்று 84வது பிறந்த தினம்!
