தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 12

இதே நாளில் அன்று: அக். 12

இதே நாளில் அன்று: அக். 12


PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 12, 1967

உத்தர பிரதேச மாநிலம், அக்பர் பூரில், ஹீராலால் லோகியா -– சந்தா தேவி தம்பதி மகனாக, 1910, மார்ச் 23ல் பிறந்தவர் ராம் மனோகர் லோகியா.

சிறுவயதிலேயே தாயை இழந்த இவர், பள்ளிப் படிப்பை அக்பர்பூரிலும், மும்பையிலும் முடித்தார். பின், பனாரஸ் ஹிந்து பல்கலை, கொல்கட்டா வித்யாசாகர் கல்லுாரியில் படிப்பை முடித்த பின், ஜெர்மனியின் பெர்லின் பல் கலையில் பொருளாதாரம், அரசியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

இளம் வயதிலேயே காங்கிரஸ் சோஷலிச கட்சியில் இணைந்து, நாட்டின் விடுதலை போரில் தீவிரமாக பங்கேற்றார். 1942ல், ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலி மூலம் விடுதலை செய்திகளை பரப்பினார். 1963ல் பரூக்காபாத், 1967ல் கன்னோஜ் தொகுதிகளில் எம்.பி.,யானார்.

பொது தொண்டையும், சோஷலிச கொள்கைகளையும் வாழ்நாள் லட்சியங்களாக கொண்டு இயங்கிய இவர், தன் 57வது வயதில், 1967ல் இதே நாளில், புதுடில்லியில் மறைந்தார்.

இந்திய அரசியலில் மாற்று சிந்தனைகளையும், சமத்துவத்தையும் ஆழமாக விதைத்தவரின் நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us