தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 18

இதே நாளில் அன்று: நவ. 18

இதே நாளில் அன்று: நவ. 18


PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 18, 1910

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டம், ஓய்ரி கிராமத்தில் கோஷ்டா பிஹாரி தத் – காமினி தேவி தம்பதியின் மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர், படுகேஷ்வர் தத்.

பள்ளி படிப்பை சொந்த ஊரில் முடித்த இவர், கான்பூரில் உயர்கல்வி பயின்றபோது, புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, இளம் வயதிலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் இணைந்து, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ அமைப்பில் செயல்பட்டார். 1929, ஏப்ரல் 8ல், டில்லி மத்திய சட்டசபைக்குள் பகத்சிங்குடன் இணைந்து இரண்டு குண்டுகளை வீசினார். அது வெடித்து சட்டசபை வளாகமே புகை மண்டலமாக மாறியது.

இந்த வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவால், 1938ல் விடுதலையான இவர், 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மீண்டும் சிறை சென்றார்.

நாட்டின் விடுதலைக்காக வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்த இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 1965, ஜூலை 20ல், தன் 54வது வயதில் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us