PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM

நவம்பர் 22, 1864
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜனார்தன் பாண்டுரங்க் – ஜெயந்திபாய் தம்பதியின் மகளாக 1864ல், இதே நாளில் பிறந்தவர், ருக்மாபாய் ராவத்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தாயின் மறுமணத்துக்கு பின், வளர்ப்பு தந்தையும் மருத்துவருமான சகாராம் அர்ஜுனின் ஆதரவுடன் கல்வி கற்றார். தன் 11வது வயதில், தாதாஜி பிகாஜி என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால், கணவருடன் வாழ மறுத்து, தன் கல்வி உரிமைக்காகவும், குழந்தை திருமணத்துக்கு எதிராகவும் சட்ட போராட்டம் நடத்தினார்.
இவரது சட்ட போராட்டம், இந்தியாவில் பெண்களின் திருமண உரிமை, சம்மதம் குறித்த விவாதங்களை ஏற்படுத்தி, 1891ல் திருமண ஒப்புதல் வயது சட்டம் இயற்ற வழிவகுத்தது.
லண்டன் பெண்கள் மருத்துவ பள்ளியில் மருத்துவம் படித்தார். 1895ல் இந்தியா திரும்பி சூரத், ராஜ்கோட் மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். பொது சுகாதார பணி களுக்காக, ‘இந்திய பேரரசர்’ என்ற பொருள்படும், ‘கைசர்- இ -ஹிந்த்’ பதக்கம் பெற்றார்.
பெண்களின் கல்வி, சுகாதார உரிமைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவர், 1955, செப்டம்பர் 25ல், தன் 90வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
