தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 24

இதே நாளில் அன்று: நவ. 24

இதே நாளில் அன்று: நவ. 24


PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 24: மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில், ராஜிப் ராய் – மேரி ராய் தம்பதியின் மகளாக, 1961ல் இதே நாளில் பிறந்தவர், சூசன்னா அருந்ததி ராய்.

கேரள மாநிலம், கோட்டயம் கார்பஸ் கிறிஸ்டி பள்ளி, நீலகிரி மாவட்டம், லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பயின்றார். டில்லியில் கட்டடக்கலை பயின்றார்.

எழுத்தாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் புகழ் பெற்ற இவர், இன் விச் ஆனி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற இந்தியாவில் தயாரான ஆங்கிலப் படத்துக்கு கதை எழுதி, தேசிய திரைப்பட விருது பெற்றார். 1997ல், இவரது முதல் நாவலான, ‘தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ உலகப் புகழ் பெற்றதுடன், அதே ஆண்டில், ‘புக்கர்’ பரிசை பெற்ற முதல் இந்திய பெண் என்ற சிறப்பையும் பெற்றார்.

நர்மதா அணை திட்டம், அணுசக்தி எதிர்ப்பு, காஷ்மீர் மற்றும் பழங்குடியினர் நலன் சார்ந்த விவகாரங்களில் களப்பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் கவனம் பெற்ற எழுத்தாளரான இவர், படைப்பு இலக்கியத்தையும், சமகால அரசியல் சமூக விமர்சனத்தையும் கூர்மையான மொழியில் முன்வைத்து, தொடர்ந்து இயங்கி வருகிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின், ‘பென் பின்டர்’ விருதை, 2024ல் பெற்ற இவருக்கு இன்று, 65வது பிறந்த தினம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us