PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

நவம்பர் 23, 1921
திருவாரூர் மாவட்டம் பழையனுாரில், திருவேங்கடம் – செண்பகம் தம்பதியின் மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் ராசகோபாலன். ராஜாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில், இலவச மாணவர் விடுதிகளில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணம் கற்றார்.
பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றால், ‘சுப்புரத்தினதாசன்’ என்ற பெயரைச் சூட்டி, அதன் சுருக்கமான, ‘சுரதா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார். கவிதைகளில் உவமைகளை தனித்துவமாகக் கையாண்டதால், ‘உவமை கவிஞர்’ என போற்றப்பட்டார்.
இவரது, ‘தேன்மழை, துறைமுகம், சாவின் முத்தம், சிரிப்பின் நிழல்’ உள்ளிட்ட நுால்கள், தமிழ் கவிதை உலகில் தனித்துவமானவை. ‘இலக்கியம், காவியம், ஊர்வலம்’ ஆகிய இதழ்களை நடத்தி, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.
தமிழ் மொழியின் வளத்திற்கும், கவிதை மரபின் செழுமைக்கும் அயராது உழைத்தார். திரைப்பட பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். தமிழக அரசின், ‘கலைமாமணி, முதல் பரிசு, பாரதிதாசன்’ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் கவிதை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இவர், 2006 ஜூன் 20ல், தன் 84வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
