PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

நவம்பர் 14, 1977
மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் கவுர் மோகன் தே – ரஜனி தேவி தம்பதியின் மகனாக 1896, செப்டம்பர் 1ல் பிறந்தவர் அபய் சரண் தே.
இவர், வீட்டிலேயே தந்தையிடம் ஆன்மிக கல்வி, சமஸ்கிருதம், வைணவ மரபுகளை கற்றார். கொல்கட்டா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லுாரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதார பிரிவுகளில் பட்டம் பெற்றார்.
இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டு, தன் குருவான பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் கூறியபடி, வைணவ சமய பணிகளில் ஈடுபட்டார். 1933-ல் அவரிடம் தீட்சை பெற்றார். 1944-ல், ‘பேக் டு காட்ஹெட்’ என்ற ஆங்கில இதழை தொடங்கினார். ஆன்மிக பணிக்காக, 1947-ல், ‘பக்திவேதாந்த’ பட்டம் பெற்றார். 1959-ல் துறவறம் ஏற்று, பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆனார்.
பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் உள்ளிட்ட ஹிந்து சமய நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகளவில் லட்சக்கணக்கான சீடர்களை உருவாக்கினார். தன் 69வது வயதில் அமெரிக்கா சென்று, உலகளாவிய கிருஷ்ண பக்தி இயக்கமான, ‘இஸ்கான்’ அமைப்பை, 1965ல் நிறுவினார்.
‘ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்ற அமைப்பை உலகம் முழுதும் பரப்பி, பல நாடுகளில் கோவில்களையும், ஆன்மிக மையங்களையும் உருவாக்கிய இவர், தன் 81வது வயதில் 1977ல் இதே நாளில் காலமானார்.
இவரது நினைவு தினம் இன்று!
