தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 29

இதே நாளில் அன்று: நவ. 29

இதே நாளில் அன்று: நவ. 29


PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில், சுடலைமுத்து பிள்ளை – இசக்கி அம்மாள் தம்பதியின் மகனாக, 1908ல் இதே நாளில் பிறந்தவர், நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் எனும் என்.எஸ்.கிருஷ்ணன்.

இவர், வறுமை காரணமாக பள்ளிக்கல்வியை தொடர முடியாமல், சிறுவயதிலேயே நாடகம், இசை, வில்லுப்பாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். நாடகக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி, தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றார்.

கடந்த 1935-ல் வெளியான மேனகா திரைப்படம் மூலம் கவனம் பெற்றார். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என, பல துறைகளில் சாதித்தார். 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர், மூடநம்பிக்கை ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மதுவிலக்கு, சமூக சமத்துவம் போன்ற கருத்துக்களை நகைச்சுவை வழியே எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தார். இதனால், ‘கலைவாணர்’ என போற்றப்பட்டார்.

தன் வருமானத்தின் பெரும் பகுதியை ஏழை எளியோர் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காக வாரி வழங்கினார். தமிழ் சினிமாவில் கருத்தாழமிக்க நகைச்சுவைக்கு அடித்தளம் அமைத்த இவர், 1957 ஆகஸ்ட் 30-ல் தன் 48-வது வயதில் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us