தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 14

இதே நாளில் அன்று: அக். 14

இதே நாளில் அன்று: அக். 14


PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 14: சென்னையில் தோல் வணிகத்தில் ஈடுபட்ட ஒய்.ஆர்.காய்தொன்டே என்பவரின் மகளாக, 1939ல் இதே நாளில் பிறந்தவர் சுனிதி சாலமன்.

சென்னையில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்து, மருத்துவம் பயின்றார். பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நோயியல் துறையில் பயிற்சி பெற்றார். சென்னை மருத்துவக் கல்லுாரியில் நுண்ணுயிரியல் பேராசிரியராக பணியாற்றினார்.

எச்.ஐ.வி., எனும், ‘எய்ட்ஸ்’ தொற்று குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்தபோது, 1986ல் இந்தியாவில் முதன் முறையாக எச்.ஐ.வி., தொற்றை கண்டறிந்து, மருத்துவ உலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, ஆராய்ச்சி, விழிப்புணர்வு பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்தார்.

கடந்த 1993ல் சென்னையில், ‘ஒய்.ஆர்.ஜி., கேர்’ என்ற எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தை நிறுவிய இவர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர் மீதான பாகுபாட்டை களையவும், அவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் பாடுபட்டார்.

தேசிய மகளிர் உயிரி அறிவியலாளர் விருது உள்ளிட்ட அங்கீகாரங்களை பெற்ற இவர், தன் 75வது வயதில், 2015 ஜூலை 28ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us