தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 17

இதே நாளில் அன்று: அக். 17

இதே நாளில் அன்று: அக். 17


PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 17: கோவையில், கந்தசாமி செட்டியார் – ஸ்ரீரங்கம்மாள் தம்பதியின் மகனாக, 1892ல் இதே நாளில் பிறந்தவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார். கோவையில் பள்ளி படிப்பை முடித்த இவர், சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பொருளாதாரம் படித்து, சட்டமும் படித்தார்.

கடந்த 1917ல் நீதிக்கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்ட இவர், கோவை நகராட்சி துணை தலைவராகவும், மத்திய சட்டசபை தலைவராகவும் பணியாற்றினார். 1935 – 1941ல் கொச்சி சமஸ்தான திவானாக இருந்தார். சுதந்திர இந்தியாவில் அமைந்த காங்கிரஸ் அரசின், முதல் நிதியமைச்சராக பொறுப்பேற்று, 1947 நவ., 26ல் நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழிசை இயக்கத்தின் ஆதரவாளராகவும் விளங்கிய இவர், 1933ல் பிரிட்டிஷ் அரசின், ‘நைட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி இந்தியன் எம்பயர்’ பட்டம் பெற்றார்; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், இந்திய தணிக்கை துறை தலைவராகவும் சேவையாற்றிய இவர், தன் 60வது வயதில், 1953, மே 5ல் மாரடைப்பால் காலமானார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us