தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 8

இதே நாளில் அன்று: அக். 8

இதே நாளில் அன்று: அக். 8


PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 8: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத் தான்காடு கிராமத்தில், அருணாச்சலம் – விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1930, ஏப்ரல் 13 பிறந்தவர், கல்யாணசுந்தரம்.

குடும்ப வறுமையால் பள்ளி படிப்பை முடிக்காமல் விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளம், மாடு வியாபாரம், மீன் பிடித்தல், தண்ணீர் வண்டி தள்ளுதல், நாடக நடிப்பு உள்ளிட்ட பல தொழில்களை செய்தார்.

கம்யூனிசம், பகுத்தறிவு கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், கவிஞர் பாரதிதாசனிடம் உதவியாளராகி, ‘குயில்’ இதழில் பணியாற்றினார். படித்த பெண் திரைப்படம் வாயிலாக பாடலாசிரியர் ஆனார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், அவற்றில் உழைப்பாளிகளின் துயரங்கள், சமூக சீர்திருத்த கருத்துக்கள், பொதுவுடைமை கொள்கைகளை வெளிப்படுத்தினார்.

இவரது, ‘துாங்காதே தம்பி துாங்காதே, சின்னப் பயலே சின்னப்பயலே, திருடாதே பாப்பா திருடாதே’ உள்ளிட்ட பாடல்கள் காலத்தால் அழியாதவை; இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இவர், தன் 29வது வயதில், மூக்கு அறுவை சிகிச்சைக்கு பின், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, 1959ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us