PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM

ஜூலை 28, 1928
கடலுாரில், பள்ளிக்கரணை திருமலை என்பவரின் மகனாக, 1928ல் இதே நாளில் பிறந்தவர், பி.டி.நரசிம்மன்.
சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், வேதியியலில் முதுநிலை, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி.,யில் பிஎச்.டி., பட்டங்களை பெற்றார். பின், கோட்பாட்டு வேதியியல், காந்த அதிர்வு பற்றி அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை, இல்லினாய்ஸ் மற்றும் கொ லம்பியா பல்கலைகளில் ஆராய்ச்சி செய்தார்.
நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் மார்ட்டின் கார்ப்ளஸ் உடன் பணியாற்றினார். நாடு திரும்பி, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து, கணக்கீட்டு வேதியியல், 'குவான் டம்' வேதியியல் ஆராய்ச்சி துறைகளை தொடங்கினார். சர்வதேச ஆய்விதழ்களில், ௨௦௦க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். நாட்டின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர், சர்.சி.வி.ராமன் விருதுகளை பெற்ற இவர், தன் 84வது வயதில், 2013, மே 3ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
