PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

'சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டாங்க!'
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலர் சந்திரன், அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன் ஆகியோர் மட்டும் பேசினர்.
ஜெகத்ரட்சகன் பேசும்போது, 'தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், நம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் குறித்து தான் பேசுறாங்க' என, சில நிமிடங்கள் அவரதுபுகழ் பாடினார். அதன்பின், வேறு யாருக்கும் பேச வாய்ப்பு தராமல், கூட்டத்தை முடித்து விட்டனர்.
இதனால், கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் எரிச்சல்அடைந்தனர். 'பொது உறுப்பினர்கள் கூட்டம்என அழைத்து, எங்களிடம் நிறை, குறைகளை கேட்காமல், எம்.எல்.ஏ., புகழ் பாட, எங்களை ஏன் அழைக்க வேண்டும்' என, ஒரு நிர்வாகி சலித்துக் கொண்டார்.
அருகில் இருந்த மற்றொருவர், 'நம்மை பேச விட்டா, எம்.பி., - எம்.எல்.ஏ., மேல புகார்களை அடுக்கிடுவோமே... அதான் சாமர்த்தியமா, 'சட்டுபுட்டு'ன்னு கூட்டத்தை முடிச்சுட்டாங்க' என்றபடியே
வெளியேறினார்.