sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

பக்க வாத்தியம்

/

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்


PUBLISHED ON : செப் 21, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 21, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாயே திறக்காமல்...!



விழுப்புரம் நகராட்சியில், 36 வார்டுகளில், 10 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.

இதில், அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா மட்டுமே கூட்டம் தோறும் வார்டு குறைகளை பேசுவார். மற்ற பெண் கவுன்சிலர்கள் வாய் திறந்ததே இல்லை. பெயரளவில் ஒன்றிரண்டு கூட்டங்களில் மட்டும் வார்டு பிரச்னைகளை சிலர் பேசியுள்ளனர். ஐந்தாண்டில் கடைசியாக நடந்த கூட்டத்தில், ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசினர். 'இப்போதாவது பேசுங்களேன்' என, பெண் கவுன்சிலர்களிடம் இதர கவுன்சிலர்கள் வற்புறுத்த, இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே எழுந்து, 'நன்றி...' எனக் கூறிவிட்டு அமர்ந்தனர். மற்றவர்கள் கூச்சப்பட்டு, அது கூட பேசவில்லை. இதைப் பார்த்த நிருபர் ஒருவர், 'பெண்களுக்கு உரிமை கொடுத்து கவுன்சிலர் ஆக்கினாலும், கடைசி வரை டம்மியாவே இருந்துட்டு போறாங்களே...' என, ஆதங்கப்பட்டார்.



'சின்னையான்னு கூப்பிடு...!'



சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சின்னையா, அமைச்சராகும் முன் சென்னை, பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்தவர். கட்சி பணிகளில் ஆர்வம் காட்டியதால், தற்போது அமைச்சராகி உள்ளார். அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஏராளம். அமைச்சர் பதவி ஏற்ற பின், அவர் கலந்து கொள்ளும் பொது விழாக்களில், தன்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் யாரையாவது பார்த்து விட்டால், உடனே பெயர் சொல்லி அழைத்து, மனம் விட்டு பேசுகிறார். அமைச்சர் என்பதால் அவரது நண்பர்கள், 'அண்ணே...' என்று அழைத்தால், 'யோவ்... அப்படி கூப்பிடாதே... எப்போதும் போல் சின்னையான்னே கூப்பிடு...' என்று செல்லமாக கடிந்து கொள்கிறார். இதைக் கண்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'பதவி வரும் போது பணிவு வரணும்ங்கறதை அண்ணன் நல்லா கடைப்பிடிக்கறாரே...' என, மெச்சினார்.








      Dinamalar
      Follow us