PUBLISHED ON : டிச 06, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பா.ஜ., சார்பில் கிழக்கு மாவட்ட சோழவந்தான் தொகுதி பூத் கமிட்டி மாநாடு டிச.12ல் செம்மினிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.
இந்த மாநாடு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். மண்டல் தலைவர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சாமி ஆலோசனை வழங்கினார். மண்டல் தலைவர்கள் முனீஸ்வரி, இருளப்பன் பங்கேற்றனர்.

