PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவாற்றலை வளர்க்கும் துாக்கம்
துாக்கம் உடல், மனதுக்கு மிக அவசியம். இந்நிலையில் தினசரி கூடுதலாக 15 நிமிடம் துாங்குவது இளைஞர்களிடம் வாசிப்பு, பிரச்னையை தீர்க்கும் திறன், கவனம் செலுத்துவது உள்ளிட்ட அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 9 - 14 வயதுக்குட்பட்ட 3222 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சராசரியாக 7 மணி நேரம், 10 நிமிடம் துாங்கியவர்களை விட, 7 மணி நேரம், 25 நிமிடம் துாங்கியவர்களிடம் அறிவாற்றல் திறன் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

