PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

திருப்பூர் மண்டல தபால் துறையில், கடந்தாண்டு சிறப்பாக பணியாற்றிய தபால் அலுவலர், ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழா, திருப்பூர் கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பள்ளி தலைவர் மோகன் கார்த்திக் பேசுகையில், 'ஒரு காலத்தில் ஊருக்கு போஸ்ட்மேன் வந்தால், அவருக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. நான் சிறுவனாக இருந்த போது, தபாலில் தான் பள்ளி ரிசல்ட் வரும். அவரை பார்த்தால் இன்னைக்கு என்ன சொல்ல போகிறாரோ என பயம் வரும்.
'படிப்பு முடித்து இன்று பள்ளி தலைவராக உள்ளேன். இவ்வளவு தபால் அலுவலர்களை ஒரே நேரத்தில் பார்க்கிறேன்; இப்போது பயமில்லை. பயத்தை போக்கியது படிப்பு தான்' என, சிலாகித்து பேசினார்.
இதைக் கேட்ட தபால்காரர் ஒருவர், 'அந்த காலத்துல படிக்காதவங்க தபால்காரரை தேடி வந்து தபால் வாங்கிட்டு போவாங்க... இப்ப படிச்சவங்க வீட்டு வாசலில் நின்று நாங்க கரடியா கத்த வேண்டியிருக்கு...' என, முணுமுணுத்தார்.