PUBLISHED ON : ஜன 23, 2026 03:59 AM

அ.தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல கருத்து கேட்புக் கூட்டத்தை, சமீபத்தில் மதுரையில் நடத்தியது.
மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார் ஆகியோர் மனு அளித்தனர்.
அதை பெற்றுக்கொண்ட குழுவின் தலைவரான நத்தம் விஸ்வநாதன், 'மதுரையில் மூவரும், சேர, சோழ, பாண்டியராக உள்ளனர். இவர்கள் சட்டசபையில் எப்போது பேசினாலும், மதுரைக்கான கோரிக்கைகள் குறித்து பேசாமல் இருக்க மாட்டார்கள். மதுரை என்றாலே, இந்த மும்மூர்த்திகள் தான் கட்சியினருக்கு நினைவுக்கு வரும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இந்த மூணு பேர்ல, யார் பெரியவர்னு ஒரு பனிப்போரே நடப்பது இவருக்கு தெரியாது போலும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

