PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், 'பதவி விலகு... பதவி விலகு... கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று, பொம்மை முதல்வரே பதவி விலகு...' என்ற கோஷங்களை எழுப்பினர். ஆனால், ராஜேந்திர பாலாஜி மட்டும், பொம்மை என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்தார்.
இதை கவனித்த தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன், முன்பு ஒரு முறை தமிழக அரசை விமர்சித்து, கைது நடவடிக்கையில் சிக்கிட்டாருல்ல... தி.மு.க., ஆட்சி முடிய இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறதால, மறுபடியும் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்னு உஷாரா தான் இருக்காருப்பா' எனக் கூற, சக தொண்டர் ஆமோதித்து சிரித்தார்.