PUBLISHED ON : ஜன 15, 2026 08:27 AM

1. தீவிர மன அழுத்தத்தைச் சீர்செய்யும் வகையில், வீட்டிலேயே பயன் படுத்தக்கூடிய 'ஹெட்செட்' ஒன்றுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து வாரியம் அனுமதியளித்துள்ளது. இந்தக் கருவி, மூளையின் முன்பகுதிக்கு லேசான மின்சாரத் தூண்டுதலை அளிக்கிறது. மருந்துகளைத் தவிர்த்து, மருத்துவக் கண்காணிப்புடன் இக்கருவியை பயன்படுத்தலாம்.
![]() |
2. சிங்கப்பூர் தேசிய பல்கலை ஆய்வாளர்கள் தாவரத் திசுக்களுக்குள் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை நேரடியாகச் செலுத்தும் 'நுண் ஊசிப் பட்டை'யை உருவாக்கியுள்ளனர். கரையும் தன்மை கொண்ட இது, உரங்களின் தேவையை குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் பயிர் விளைச்சலை அதிகப்படுத்தும்.
![]() |
3. சுவிட்சர்லாந்தின் இ.பி. எப்.எல்., விஞ்ஞானிகள், பெரும் தரவு மையங் களின் உதவியின்றி, கருவி களிலேயே நேரடியாக இயங்கும் ஏ.ஐ., அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது ஏ.ஐ., இயங்குவதற்கான மின்சாரம், தண்ணீர் தேவையை பெருமளவு குறைத்து, அவை உண்டாக்கும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் குறைக்கும்.
![]() |
4. ஜெர்மனியின் பிரான்ஹோபர் ஆய்வகம், ஈறுகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் புதிய பற்பசையை உருவாக்கியுள்ளது. இது வாயிலுள்ள நன்மை செய்யும் கிருமிகளைக் கொல்வதில்லை. மாறாக, வாயிலுள்ள நுண்ணுயிரிச் சூழலில் சமநிலையைப் பேணி, நோயைக் குணப்படுத்த உதவுகிறது.
![]() |
5. கொரோனா முடக்க காலத்தில், நகரப் பறவைகளின் அலகுகள் வேகமாக மாற்றமடைந்திருப்பதை கலிபோர்னிய பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இரண்டு ஆண்டுகளில், மனிதர்கள் வீசும் உணவுக்கழிவுகள் குறையவே, பறவைகளின் இரையில் நேர்ந்த மாற்றத் தினாலேயே, இந்தப் பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது.





