PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

திருப்பூர், அரிசி கடை வீதியில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில், திருப்பூர் லோக்சபா தொகுதி இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'நான் சின்ன பையனா இருந்த போது பார்த்திருக்கிறேன். வீட்டில் அம்மா, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவார். சாணத்தை பிடித்து வைத்து ஒரு அருகம்புல்லை அதில் செருகி, விநாயகர் பூஜை நடத்துவார்; முடிந்தவுடன் எடுத்து, வாய்க்காலில் கரைத்து விடுவார். இதைத்தான் பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழித்து எறிந்தால் சாணம் என சொல்லிக் கொடுத்தார். இப்படித்தான் விநாயகர் சதுர்த்தி வந்தது. ஆனால், இப்போது விநாயகர் சதுர்த்தியில் அரசியல் புகுந்து விட்டது' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இவங்க அரசியல் எல்லாம் ஹிந்து கடவுளிடம் மட்டும் தான் இருக்கும்... மற்ற கடவுளை தொட்டால் டிபாசிட் காலியாகிடுமே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.