தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'தி.மு.க., தயவில் பிழைப்பு ஓடுது!'

'தி.மு.க., தயவில் பிழைப்பு ஓடுது!'

'தி.மு.க., தயவில் பிழைப்பு ஓடுது!'


PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரியில் நடந்த, காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். அப்போது கூறுகையில், 'பா.ம.க., இட ஒதுக்கீட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது பா.ஜ., கட்சி. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர். இன்னும் சொல்லப் போனால், ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு முதல் எதிரி பா.ஜ., தான். அக்கட்சியுடன் எப்படி இவர்கள் கூட்டணி வைத்தனர். இட ஒதுக்கீட்டிற்காக போராடி உயிர் நீத்தவர்களின் ஆன்மா அவர்களை மன்னிக்காது' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டிய தி.மு.க.,வுடன் இவர்கள் கூட்டணி வைக்கலாமா...?' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அதே தி.மு.க., தயவில் தான் தமிழகத்தில் காங்கிரஸ் பிழைப்பு ஓடுது... இல்லைன்னா என்னைக்கோ காணாம போயிருக்கும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us