PUBLISHED ON : ஜூன் 20, 2026 12:30 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., வேட்பாளராக போட்டியிட்ட மாங்குடி தோல்வியடைந்தார்.
மாங்குடிக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேசுகையில், 'தேர்தலில் மாங்குடிக்கு ஓட்டு கேட்டு வந்தோம்; அவரும் சிறப்பாகவே தேர்தல் பணியாற்றினார். இத்தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க., வேட்பாளர் பிரபுவுக்கு வாழ்த்துகள். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். மாங்குடிக்கு ஓட்டு போட்ட வர்களுக்கும், போடாதவர்களுக்கும் நன்றி' என்றார்.
மொத்தம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு கிளம்பி விட்டார்.
இதை பார்த்த காங்., தொண்டர் ஒருவர், 'தன் ஆதரவாளர் மாங்குடியை தோற்கடிச்ச மக்கள் மத்தியில், அஞ்சு நிமிஷம் பேசியதே அதிகம்னு நினைச்சுட்டாரோ...?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
