தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'மனசு உடைஞ்சு புலம்புறாங்க!'

 'மனசு உடைஞ்சு புலம்புறாங்க!'

 'மனசு உடைஞ்சு புலம்புறாங்க!'

1


PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசுகையில், 'தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதத்திலேயே மக்கள் மகிழ்ச்சியை இழந்து விட்டனர். தி.மு.க., ஆட்சியில், ஐந்தாண்டு காலம் மின்வெட்டு இல்லாத நிலை இருந்தது. ஆனால், தற்போது சென்னையிலேயே மின் வெட்டை கண்டித்து போராட்டம் நடக்கிறது.

'நடிப்பு வேறு, ஆட்சி வேறு. சினிமாவில் ஒரு நாள் முதல்வர் போல், நிஜத்தில் ஆட்சி செய்ய முடியாது. சினிமாவில் விஜய் கேரவனில் அமர்ந்து சாப்பிட்டார். இப்போது அலுவலகம் வந்து சாப்பிடுகிறார். தமிழக முதல்வர் விஜயா, ஆதவ் அர்ஜுனாவா என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'மக்கள் தெளிவா தான் இருக்காங்க... இவங்கதான் தோல்வியில் மனசு உடைஞ்சு போய் புலம்புறாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us