/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'ஏதும் 'பிளான்' வச்சுருக்காங்களோ?'
/
'ஏதும் 'பிளான்' வச்சுருக்காங்களோ?'
PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

மதுரையில் நடந்த விபத்தில் உயிரிழந்த, மூன்று ம.தி.மு.க., நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு, 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில், அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'நடிகர் விஜய், சினிமாவில்ஜொலிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம். அவரை இளைஞர்கள் முதல் அனைவரும் விரும்புகின்றனர். தமிழகத்திற்கு அவரால் நல்லது நடந்தால் நிச்சயம் சந்தோஷம் தான். அவர் கட்சி கொடி அறிமுக விழாவில் சமூக நீதி, மதச்சார்பின்மை குறித்து கூறியுள்ளார். அதை வரவேற்கிறோம்.
'விஜய் நல்லது நினைக்கலாம்; ஆனால், நடைமுறைஅரசியல் மிகவும் கஷ்டமானது. கட்சியின் கொள்கையைவிரிவாக கூறுவதாக தெரிவித்துள்ளார். அது என்னவென எதிர்பார்க்கிறோம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'எதுக்கு... மக்கள் நலக்கூட்டணி ஆரம்பிச்சு விஜயகாந்த் அரசியல் கதையை முடிச்ச மாதிரி விஜய்க்கும் எதுவும் பிளான் வச்சிருக்காங்களோ...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.