PUBLISHED ON : ஆக 28, 2024 12:00 AM

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அரசியல் பணியின், 25வது ஆண்டு வெள்ளி விழா ஈரோட்டில் நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த விழாவில் பல கட்சி தலைவர்களும் பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'கால் நுாற்றாண்டு அரசியல் களத்தில் நிற்கும் யுவராஜாவை பார்த்து பெருமைப்படுகிறேன்' என்றார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கட்சிக்குள் ஜனநாயகம் இருக்க வேண்டும் என, இரண்டு முறை தேர்தல் வாயிலாக இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்றார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அரசியல் பயணத்தில் வெள்ளி விழா காணும் யுவராஜாவின் சேவை மக்களுக்கு தேவை' என்றார்.
த.மா.கா., நிர்வாகி ஒருவர், 'வெள்ளி விழாவை சாக்கு வைத்து, வீடியோ கான்பரன்ஸ் வழியாகவே அ.தி.மு.க., கூட்டணியில் சீமானை சேர்க்க அச்சாரம் போடுறாரோ...' என, முணுமுணுத்தார்.

