PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் நடந்தது. இதில், ஐந்தாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம், மழை வெள்ள பாதிப்பில், கவுன்சிலர்கள் செலவழித்தத் தொகை விபரங்களை கோரி, விவாதம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாரிகள், 'செலவுகளுக்கு உதவி பொறியாளர் தான் பொறுப்பு' என பதிலளித்தனர்.
அதை கேட்ட சொக்கலிங்கம், 'ஏ.இ., தான் எல்லாத்துக்கும் பொறுப்பா; மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பா; நாங்கள் உழைத்துள்ளோம் செருப்பா' என, அடுக்குத் தொடரில் பேசினார்.
இதை பார்த்த கவுன்சிலர் ஒருவர், 'இவரு என்ன, டி.ஆருக்கு தம்பியா... இப்படி அடுக்கு மொழியில் அலற விடுறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக கவுன்சிலர்கள் சத்தமின்றி சிரித்தனர்.