PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

கோவையில் நடந்த காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'தமிழகத்தில் பல ஆண்டுகளாக நாம் ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம், இங்கிருக்கும் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை. பெருந்தலைவர்களான இந்திரா, ராஜிவ் உள்ளிட்டோர் தம் உயிரை தியாகம் செய்து கட்சியை வளர்த்துள்ளனர். நம் நடவடிக்கைகளை அவர்கள் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும்' என, ஆதங்கத்துடன் பேசினார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அவ்வளவுமேல இருக்கிறவங்கள விடுங்க... இங்க 2,000 கி.மீ., தள்ளி டில்லியில் இருக்கிறவங்க தமிழகத்தில் கட்சியை ஒழுங்கா கண்காணிச்சிருந்தாலே இந்த நிலை வந்திருக்காதே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.