PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமநாதன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி கடனில் இருப்பதாகவும், கடைகள் ஏலம் விடுவதில், 32 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதால், இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டனர்.
அப்போது, மேயர் ராமநாதன், கவுன்சிலர்கள் கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்காமல், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி' என பேசியதால், அ.தி.மு.க.,வினர் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள், 'பதில் சொல்ல ஒன்றுமில்லைன்னா, எதிர் தரப்பை டென்ஷன் பண்றது தானே இவங்க வழக்கம்... காரியத்தை கனகச்சிதமா முடிச்சிட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.